ட்விட்டர் பயனர்களுக்கு ஷாக்!… புதிய கட்டுப்பாடுகளை விதித்த எலான் மஸ்க்!… என்ன தெரியுமா?

டேட்டா ஸ்கிராப்பிங், தகவல் ஆளுகைக்காக பயனர்களுக்கு தற்காலிக வரம்புகளை நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.


ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் (Verified Accounts) ஒரு நாளைக்கு 10,000 பதிவுகளையும், பிற பயனர்கள் 1000 பதிவுகளையும், புதிய பயனர்கள் 500 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற தரவுகளை ஒழிப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார். முதலில், சரிபார்க்கப்பட்ட கணக்கு உள்ள பயனர்கள் ஒரு நாளைக்கு 6,000 பதிவுகளைப் பார்க்கலாம். சரிபார்க்கப்படாத பயனர்கள் ஒரு நாளைக்கு 600 ட்விட்களைப் பார்க்கலாம். புதிதாக கணக்கு தொடங்கிய பயனர்கள் ஒரு நாளைக்கு 300 இடுகைகளை மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

KOKILA

Next Post

ரேசன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை...? அமைச்சர் இன்று ஆலோசனை கூட்டம்...!

Mon Jul 3 , 2023
தக்காளி விலை கடந்த சில தினங்களாக உச்சம் தொட்டு வருகிறது. இந்நிலையில், சில்லரைக்கு ஒரு கிலோ ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. […]
images 4 7

You May Like