காலையிலேயே அதிர்ச்சி!. பிலிப்பைன்ஸில் 6.1 அளவில் பயங்கர நிலநடுக்கம்!. அலறிய மக்கள்!

Philippines earthquake today

பிலிப்பைன்ஸில் மீண்டும் பூமி அதிர்ந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பீதியை ஏற்படுத்தியது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். அச்சம் காரணமாக அலறல் மற்றும் கூச்சல்கள் எழுந்தன. ஜெர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் (GZF), வெள்ளிக்கிழமை பிலிப்பைன்ஸின் மின்டானாவோவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவித்தது.


இதன் மையம் வடக்கு அட்சரேகை 9.73° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 126.20° மற்றும் 90 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது. காயங்கள் அல்லது பெரிய சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், தாக்கத்தை மதிப்பிட்டு, சாத்தியமான பின்அதிர்வுகளை கண்காணித்து வருவதாகக் கூறினர்.

இரண்டு சக்திவாய்ந்த கடல் நிலநடுக்கங்கள் நாட்டைத் தாக்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது. அக்டோபர் 10 ஆம் தேதி, தெற்கு பிலிப்பைன்ஸின் மின்டானாவோவில் இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் , 7.4 ஆக பதிவானது, இதில் 7 பேர் பலியாகினர். மேலும் நிலச்சரிவுகளைத் தூண்டியது, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் பின்னர் திரும்பப் பெறப்பட்டன.

இரண்டாவது நிலநடுக்கம், முதற்கட்டமாக 6.8 ரிக்டர் அளவில் பதிவானதால், உள்ளூர்வாசிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இரண்டு நிலநடுக்கங்களும் டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள மனாய் நகரிலிருந்து 37 கிலோமீட்டர் (23 மைல்) ஆழத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் அகழியின் அதே பிளவுக் கோட்டில் ஏற்பட்ட இயக்கத்தால் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டெரெசிட்டோ பகோல்கோல் தெரிவித்தார். சாதாரண கடல் மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் (3.2 அடி) க்கும் அதிகமான அலைகள் எழக்கூடும் என்று பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (பிவோல்க்ஸ்) எச்சரித்தது.

Readmore: இரண்டரை மணிநேரம் தொலைபேசியில் பேசிய டிரம்ப் – புதின்!. என்ன பேசினார்கள் தெரியுமா?.

KOKILA

Next Post

உஷார்..!! இந்த வயது வரை உங்கள் குழந்தைகளை காரின் முன்புறம் அமர வைக்காதீங்க..!! தந்தை மடியிலேயே 7 வயது சிறுவன் மரணம்..!!

Fri Oct 17 , 2025
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினத்தைச் சேர்ந்த வீரமுத்து என்பவர், தனது 7 வயது மகன் கவினுடன் வாடகைக் காரில் சென்னை நோக்கிப் பயணித்தபோது நிகழ்ந்த விபத்து, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னே சென்ற கார் திடீரென திரும்பியதால், இவர்களது கார் மோதியதில் முன்புற ஏர்பேக் அதிவேகமாக வெளியே வந்துள்ளது. அப்போது, தந்தையின் மடியில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவன் கவின் முகத்தில் ஏர்பேக் பலமாக மோதியது. இதில் 7 வயது சிறுவனான கவின் […]
Air Bag 2025

You May Like