குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சரக்கு பாட்டில்களின் விலை உயருகிறது..!!

கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இனி ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

குடிமகன்கள் குடித்துவிட்டு காலி மது பாட்டில்களை சாலைகளிலும், வனவிலங்குகள் நடமாடும் இடங்களிலும் உடைத்து விட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், காலி மது பாட்டிலை திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த திட்டம் கோவையிலும் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா தலங்களில் தூக்கி வீசப்படும் காலி மதுபான பாட்டில்களால் இயற்கை சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நடைமுறைபடுத்த உத்தரவிட்டது. இந்த திட்டம் நீலகிரியில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. மேலும், இத்திட்டத்தை பிற மாவட்டங்களிலும் அமல்படுத்துமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் இதற்கான ஸ்டிக்கர் மது பாட்டிலிலேயே ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி மதுபான பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து 10 ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அந்த அறிக்கையில் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுபான பாட்டில்களை டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒப்படைத்து மாவட்டத்தின் வனப்பகுதிகளையும், விளைநிலங்களையும் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்க திட்டம்...! நோயாளிகள் பிரிவில் உடனடி சிகிச்சை....!

Thu Mar 30 , 2023
தேசிய சுகாதார ஆணையம், தனது ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகளை சிறப்பாகவும், விரைவாகவும் வழங்குவதற்கு டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் பங்கு பெறும் மருத்துவமனைகளில் ஸ்கேன் மற்றும் பகிர்வு செயல்பாடு மூலம் புற நோயாளிகள் பிரிவில் உடனடி பதிவு சேவைகள் நோயாளிகளுக்கு, வழங்கப்படுகிறது. இந்த சேவை தொடங்கப்பட்டதிலிருந்து ஆறு மாதத்திற்குள்ளாகவே 10 லட்சம் நோயாளிகள் இதனால் பயனடைந்துள்ளனர். கடந்த மாதம் (பிப்ரவரி 23, […]

You May Like