வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி.. பைக், ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்..

ஹீரோ மோட்ட்டோகார்ப் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்தி உள்ளது..

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு பைக் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி செய்து வருகிறது.. பன்னாட்டு நிறுவனமாக இயங்கி வரும் இந்த நிறுவனம், முன்னதாக, ஹீரோ ஹோண்டா என்ற பெயரில் கூட்டு நிறுவனமாக இயங்கி வந்தது. பின்னர் இரு நிறுவனங்களும் தனித்தனியே பிரிந்து உற்பத்தி பணிகளை கவனித்து வருகின்றன.

hero electric optima hx a55d

அடுத்த மாதம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையிலும் ஹீரோ நிறுவனம் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹீரோ விடா என்ற லக்ட்ரிக் பைக் தயாரிப்பில் அந்நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.. இந்த நிலையில் தங்கள் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களின் விலையை அந்நிறுவனம் உயர்த்தி உள்ளது. இதற்கு காரணம் அதிகரித்து வரும் உற்பத்தி செலவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்துள்ளது.. இந்த விலை உயர்வு இருசக்கர வாகன மாடல்களை பொறுத்து அமைந்துள்ளது.

இந்தியாவில் ஹோண்டா மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களை காட்டிலும் ஹீரோ நிறுவனம் அதிகளவில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வரும் பிராண்டாக உள்ளது. 100 முதல் 200 சிசி பைக்குகளை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. தற்போது ரூ.55,450 முதல் ரூ.1.36 லட்சம் வரையில் (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. ஸ்பிளென்டர், எக்ஸ்பல்ஸ், எக்ஸ்ட்ரீம், மேஸ்ட்ரோ உட்பட பல்வேறு வாகனங்கள் இதில் அடங்கும். இந்த வாகனங்களின் விலையில் அதன் மாடலை பொறுத்து அதிகபட்சம் 1000 ரூபாய் வரையில் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

RUPA

Next Post

இந்தியா முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு...!

Sat Sep 24 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,912 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 38 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,719 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
1007548 school covid outbreak

You May Like