இன்று வெளியாகிறது ‘சியான் 62’ அப்டேட்!

விக்ரம் நடிக்கும் 62வது திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ‘சியான்’ விக்ரம். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கும் இவர் கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்தாண்டு ஏப்ரம் மாதம் வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் 62வது திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானது. வீடியோ ஒன்றை வெளியிட்டு  ‘சியான்62’ படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த திரைப்படத்தை ‘சித்தா’ படத்தை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘சியான் 62’ படத்தின் புதிய அப்டேட் இன்று (ஏப் 3) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Next Post

மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்தது புரட்சி பாரதம்..!! 40 தொகுதிகளிலும் ஆதரவு..!!

Wed Apr 3 , 2024
அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடரும் என அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, அதிமுக கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம், மக்களவை தேர்தலில் சீட் வழங்காததால், கூட்டணியில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் […]

You May Like