ஒற்றைத் தாயின் கடைசிப் பெயர், சாதியை பள்ளிகளில் பதிவு செய்ய குழந்தைக்கு உரிமை உண்டு.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

single mother

ஒற்றைத் தாயால் மட்டுமே வளர்க்கப்படும் குழந்தைக்கு தனது, பள்ளி பதிவுகளில் தாயின் பெயரும் சாதி பெயரையும் சேர்த்துக் கொள்ள முழு உரிமை உண்டு என்று மும்பை நீதிமன்றத்தின் ஔரங்காபாத் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.. குழந்தையின் நலன் மற்றும் சிறந்த எதிர்காலமே முக்கியம் என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


மேலும் “ ஒரு குழந்தையுடன் எந்த தொடர்பும் இல்லாத தந்தையின் பெயர் அல்லது சாதியை, கட்டாயமாக பள்ளிப் பதிவுகளில் சேர்க்கச் சொல்வது சமூக நியாயத்துக்கும், உண்மைக்கும் எதிரானது. ஒற்றைத் தாயை குழந்தையின் முழுமையான பெற்றோராக அங்கீகரிப்பது கருணை அல்ல, அது அரசியலமைப்பு மதிப்புகளுக்கான மரியாதை ஆகும்” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி

2025 ஆம் ஆண்டு, 12 வயது சிறுமியும் அவரது ஒற்றைத் தாயும் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.. பள்ளி பதிவுகளில் குழந்தையின் பெயர் மற்றும் சாதியை மாற்ற அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், 2025 ஜூன் 2 அன்று கல்வி அதிகாரி அந்த கோரிக்கையை நிராகரித்தார். இதை எதிர்த்து நீதிமன்றத்தை அவர்கள் அணுகினர்.

குழந்தை பிறந்தபோது, பிறப்பு சான்றிதழிலும் பள்ளிப் பதிவுகளிலும் தந்தையின் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பின்னர், தந்தை பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதால், குழந்தை முழுமையாக தாயின் பாதுகாப்பில் மட்டும் வளர்க்கப்பட்டு வந்துள்ளார்.. எனவே “பள்ளிப் பதிவுகளில் தந்தையின் பெயரும் குடும்பப் பெயரும் தொடர்வது, குழந்தைக்கு சமூக ரீதியான பாதிப்பையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். ஏனெனில், நம் சமூகத்தில் பெயரும் சாதியும் ஒருவரின் அடையாளமாக பார்க்கப்படுகின்றன.” மனு தாரர் தரப்பு வாதிட்டது..

அரசின் வாதம்

மாநில அரசு, இந்த வகை மாற்றங்கள் அனுமதிக்கப்படாது என வாதிட்டது. ஆனால், அதே நேரத்தில், அரசு பதிவுகள் நலன் மற்றும் நிர்வாகத்திற்காகவே உருவாக்கப்பட்டவை; மாறிய சூழ்நிலைகளை புறக்கணித்து, பழைய பதிவுகளை கட்டாயமாக தொடரச் சொல்ல முடியாது என்பதையும் ஒப்புக்கொண்டது.

நீதிமன்றம் தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விபா கன்கன்வாடி மற்றும் ஹிதேன் எஸ். வெனேகாவ்கர் அடங்கிய அமர்வு, 2024 மார்ச் 14 அன்று வெளியான அரசு தீர்மானத்தை அடிப்படையாக கொண்டு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்மானத்தில், அரசு பதிவுகளில் (பள்ளி பதிவுகள் உட்பட) தாயின் பெயரை கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பள்ளி பதிவு என்பது ஒரு குழந்தையை ஆண்டுகளாகவும், கல்வி நிறுவனங்களிலும், சில நேரங்களில் தொழில்முறை வாழ்க்கையிலும் தொடர்ந்து வரும் முக்கிய ஆவணம்.
அதனால், உண்மையான வாழ்க்கை சூழ்நிலையை பிரதிபலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது..

மேலும் “ அடையாளம் என்பது அவசியம் தந்தையிலிருந்து மட்டுமே வர வேண்டும் என்ற எண்ணம், ஆணாதிக்க சமூக அமைப்பில் இருந்து வந்த பழைய முன் நம்பிக்கை.
இன்றைய இந்தியாவில், குறிப்பாக ஒற்றைத் தாயால் வளர்க்கப்படும் குழந்தைகள் விஷயத்தில், இந்த எண்ணத்தை கட்டாயப்படுத்துவது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். சில சூழ்நிலைகளில், சாதி நிர்ணயம் உயிரியல் வம்சாவளியை மட்டுமே அடிப்படையாகக் கொள்ள முடியாது.” என்று தெரிவித்தது..

எனவே குழந்தையின் பெயரும் சாதியும் பள்ளி பதிவுகளில் மாற்ற அனுமதி வழங்கி,
நீதிமன்றம் உத்தரவிட்டது.. “ஒற்றைத் தாயை, குழந்தையின் முழுமையான சமூக அடையாளத்தின் ஆதாரமாக அங்கீகரிப்பது சமூகத்தை பலவீனப்படுத்துவதில்லை;
மாறாக, அதை மேலும் நாகரிகமானதாக மாற்றுகிறது.” என்றும் நீதிமன்றம் தெரிவித்தது..

Read More : 8வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு பம்பர் ஜாக்பாட்.. சம்பளம் உயரப்போகுது..! வாழ்க்கையே மாறும்..!

RUPA

Next Post

மாசி மாத வெள்ளிக்கிழமையின் சிறப்பு..!! வீட்டில் செல்வம் அதிகரிக்க மகாலட்சுமியை இப்படி வழிபடுங்க..!!

Fri Feb 20 , 2026
பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்றாலே அது மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தை திங்கள், ஆடி மாதம் என விசேஷ வெள்ளிக்கிழமைகளில் நாம் ஆராதனைகள் செய்தாலும், சிலருக்குப் பணப் பிரச்சனைகள் தீராத சவாலாகவே இருந்து வருகிறது. “பணம் கைக்கு வருவது போல் இருக்கிறது, ஆனால் கடைசி நேரத்தில் தட்டிப் போகிறது” என்று வருந்துபவர்கள், மனம் தளர வேண்டிய அவசியமில்லை. மகாலட்சுமி வழிபாட்டைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதே இதற்குச் சிறந்த […]
mahalaxmi vrat 11zon

You May Like