SIR தமிழகத்தில் 5.90 கோடி படிவங்கள் விநியோகம்…! தேர்தல் ஆணையம் தகவல்…!

voter id aadhar link 11zon

தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில், தமிழ்நாட்டில் இதுவரை 5,90,13,184 படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 92.04 சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,41,14,582 கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு 5,90,13,184 படிவங்கள் இதுவரை ( நவம்பர் 15 மாலை 3 மணி வரை ) விநியோகிக்கப்பட்டுள்ளது.


மொத்தம் 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் 2,37,390 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது.

2025 அக்டோபர் 27-ம் தேதி நிலவரப்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 50,99,72,687 ஆக உள்ளது. இதில்  50,97,43,173 கணக்கெடுப்பு படிவங்கள் (99.95%) அச்சிடப்பட்டு அவற்றில் 48,67,37,064 கணக்கெடுப்பு படிவங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீவிர திருத்தப் பணிகளுக்காக 5,33,093 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், 10,41,291 வாக்குச் சாவடி  முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Vignesh

Next Post

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து..!! மொட்டை மாடியில் சிக்கிய 6 பேர்..!! முதியவர்களுக்கு மூச்சுத்திணறல்..!!

Sun Nov 16 , 2025
சென்னை தியாகராயநகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள இராமச்சந்திரா தெருவில் அமைந்திருக்கும் ‘மங்கள வில்லா’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வசிக்கும் கிரிதர் என்பவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவத் தொடங்கியதால், கிரிதர் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்தமிட்டவாறே […]
Chennai 2025

You May Like