விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. பல பொய்களை சொல்லி மனோஜை திருமணம் செய்து கொண்ட ரோகிணி எப்போது மாட்டுவார் என்பதை ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு. இன்றைய எபிசோட்டில், ஒட்டு மொத்த குடும்பமும் சென்னையில் இருந்து பாட்டி ஊருக்கு தீபாவளி கொண்டாடுவதற்காக வந்துள்ளனர்.
அண்ணாமலை குடும்பம் பாட்டி வீட்டில் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடுகிறார்கள். அப்போது சாமியார் வீடு தேடி வந்து அனைவரையும் எச்சரித்து செல்கிறார். தீபாவளி கொண்டாடிய பிறகு அனைவரும் கோவிலுக்கு செல்ல முடிவு செய்கிறார்கள். ரோகிணியின் தாயாரும் அவரின் கணவரின் திதிக்காக கோவிலுக்கு வந்துள்ளார்.
எதிர்பாராத விதமாக இரண்டு விசேஷங்களும் ஒரே கோயிலில் நடக்கிறது. இதை அறியாத ரோகிணி மகிழ்ச்சியாக கோயிலுக்கு செல்கிறார். அப்போது அவரது தாயார் திதி கொடுக்க வர சொல்லி ரோகிணியை அழைக்கிறார். அதோடு இன்றைய எபிசோட் நிறைவடைந்துவிட்டது. தொடர்ந்து நாளைக்கான புரோமோவில், தண்ணீர் எடுக்க வந்த மீனா, ரோகிணி கிரிஷ் மற்றும் அவரின் தாய் மூவரையும் ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.
ஐயரிடன், இது என் ஒரே மகள் கல்யாணி என்றும் இது அவனின் மகன் க்ரிஷ் என்றும் கூறுகிறாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மீனா தண்ணீர் குடத்தை கீழே நழுவ விடுகிறாள். இதை பார்த்த ரோகிணி அதிர்ச்சி அடைகிறாள். தொடர்ந்து கடுப்பான மீனா, கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் நடிக்கிறேல என்று கேட்டு ரோகிணிக்கு பளார் விடுகிறார். மீனா இனி என்ன செய்ய போகிறாள்.? ரோகிணி பற்றிய உண்மையை குடும்பத்தில் சொல்வாலா..? என்பதை பொறுத்திருந்தே பார்க்கலாம்.



