கயல் சீரியல் நடிகை தற்கொலை.. கணவருடன் வீடியோ கால் பேசிய போது யோசிக்கவே முடியாத சம்பவம்..!!

Kayal serial actress 2026 04 f22c26ad0ee2142d19eabcd4cbcada4d

பிரபல சின்னத்திரை நடிகை சுபாஷினி, சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.


சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சுபாஷினி. இலங்கையை சேர்ந்த இவர் படப்பிடிப்பு காரணமாக சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது கணவர் பிப்பின் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ கால் பேசிய போது ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணைத் தகவல்களின்படி, சுபாஷினிக்கும் அவரது கணவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கணவருடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்த போது மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இந்த விபரீத முடிவை எடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுபாஷினி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். சுபாஷினியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more: இரவு முழுவதும் ஏசியில் தூங்குறீங்களா..? இந்த பக்க விளைவுகளை தெரிஞ்சிக்கோங்க..!

English Summary

Small screen actress Subhashini committed suicide by hanging herself at her home in Chennai.

Next Post

கேஸ் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி..! ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ. 300 தள்ளுபடி..! எப்படிப் பெறுவது?

Mon Apr 6 , 2026
தற்போது, ​​கேஸ் சிலிண்டர் விலைகள் உயர்ந்துள்ளன. சமீபத்தில், மத்திய அரசு வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது; இது ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக, வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையையும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது சாமானிய மக்கள் மீது கூடுதல் சுமையைச் சுமத்துகிறது. இருப்பினும், எரிவாயு விலைகள் […]
Gas Subsidy 2025

You May Like