பணவீக்கம், வேலையின்மை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றைக் கண்டித்து மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளதால், ஈரான் முழுவதும் நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து குறைந்தது 538 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் கைது – இணையம் முடக்கம்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமை செய்தி ஏஜென்சி அமைப்பு. இதுவரை 10,600க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளத்.. பல பகுதிகளில் இணைய சேவை கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் தடை செய்யப்படவோ அல்லது வேகமாக செயலிழக்கச் செய்யப்படவோ செய்து, போராட்டக் காட்சிகள் பரவாமல் தடுக்க முயற்சி செய்யப்படுகிறது. முதலில் ஈரானின் சிறிய நகரங்களில் தொடங்கிய போராட்டங்கள், விரைவில், தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பரவின.
ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு, நாட்டின் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமைக்கு எதிராகக் கோபத்தை வெளிப்படுத்தினர். அரசு தவறான நிர்வாகம் செய்து வருகிறது. ஊழல் பரவலாக உள்ளது. சர்வதேச தடைகள் (sanctions) காரணமாக உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்..
இந்த போராட்டங்கள் இப்போது வெறும் விலை உயர்வுக்கான எதிர்ப்பாக இல்லாமல்,
ஈரானின் ஆட்சியாளர்களுக்கெதிரான பெரிய எதிர்ப்பாக மாறியுள்ளது. இணையத்தில் பரவும் காணொளிகளில், மக்கள் அரசியல் மாற்றம் கோரி, பொறுப்புணர்வு வேண்டும் என்று முழக்கமிடுவது காணப்படுகிறது.
அதிபர் மசூத் பெசெஷ்கியான் எச்சரிக்கை
சீர்திருத்தங்களை வாக்குறுதி அளித்து பதவியேற்ற ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் பேசிய போது “அமைதியான போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை கேட்க அரசு தயாராக உள்ளது. ஆனால் சில குழுக்கள் வன்முறையைத் தூண்டி, முழு சமூகத்தையே அழிக்க முயற்சிக்கின்றன. இந்த கருத்து, அரசு இனிமேல் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது.
பல மாகாணங்களில் தற்போது, பாதுகாப்புப் படைகளும், போராட்டக்காரர்களும் நேரடியாக மோதிக் கொண்டிருக்கின்றனர். 2019ல் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் பெரும் ரத்தபாய்ச்சலில் முடிந்ததைப் போல, இந்த போராட்டங்களும் அதே அளவிற்கு தீவிரமாகி வருகின்றன என பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா – இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை
போராட்டங்கள் தொடரும் நிலையில், ஈரான் அரசியல் தலைமையகம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் நாடாளுமன்றத்தில் நடந்த கடும் விவாதத்தின் போது, சபாநாயகர் மொஹம்மது பாகர் காளிபாஃப் கூறினார்..
“அமெரிக்கா ஈரானை தாக்கினால், அந்தப் பகுதியிலுள்ள அதன் அனைத்து ராணுவத் தளங்கள், கப்பல்கள் மற்றும் சொத்துகள் சட்டப்பூர்வ இலக்குகளாக மாறும்.” என்று தெரிவித்தார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் “அமெரிக்காவுக்கு மரணம்!”
என்று முழக்கமிட்டதாக கூறப்படுகிறது.
டிரம்பின் கருத்து – பதற்றத்தை அதிகரித்தது
இந்தக் கருத்துகள் வெளியாகுவதற்கு முன், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது சமூக ஊடகத்தில்: “ஈரான், இதுவரை இல்லாத அளவிற்கு சுதந்திரத்தை நோக்கிப் பார்க்கிறது. அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது!” என்று பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஈரான் அதிகாரிகள், போராட்டங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஊக்குவிக்கின்றன என்றும், தவறான தகவல்களை பரப்பி கலவரத்தை அதிகரிக்கின்றன என்றும் குற்றம்சாட்டினர்.
ஆட்சிக்கு மிகப்பெரிய சவால்
உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக தொடங்கிய இந்தப் போராட்டம்,
இப்போது ஈரான் அரசியலுக்கே மிகப் பெரிய உள்நாட்டு சவாலாக மாறியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டும், நிர்வாகத்தில் அடிப்படை சீர்திருத்தங்கள் வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.
மக்கள் நம்பிக்கையற்ற நிலை, அரசு பொருளாதாரத்தை நிலைநாட்டுவதாக வாக்குறுதி அளித்தாலும், பணவீக்கம் 40%க்கு மேல் உள்ளது. வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் அரசின் வாக்குறுதிகளை நம்பத் தயாராக இல்லை.
ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து பேசிய போது “உண்மையான சீர்திருத்தங்களோ, மக்களுடன் உரையாடலோ இல்லையெனில், இந்த போராட்டங்கள் இன்னும் தீவிரமாகி, ஈரானின் அரசியல் – பொருளாதார நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தும்.” என்று தெரிவித்தனர்.
Read More : செக் வைத்த இந்திய ரயில்வே..!! IRCTC டிக்கெட் முன்பதிவில் ஆதார் கட்டாயம்..!! இன்று முதல் அமல்..!!



