Affidavit: 39 மக்களவை தொகுதிகளிலும் இது வரை 737 பேர் வேட்புமனு தாக்கல்…!

39 மக்களவை தொகுதிகளிலும் நேற்று வரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது . தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் வேட்புமனு தாக்கல் 25-ம் தேதி தொடங்கியது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ளது. புதுச்சேரி தவிர்த்து 39 மக்களவை தொகுதிகளிலும் நேற்று வரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அதே போல மார்ச் 28-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 30 ஆகும். வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும்.

Vignesh

Next Post

Modi: அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்!

Wed Mar 27 , 2024
Modi: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. மக்களவை தேர்தலையொட்டி, தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மக்களவை தொகுதியில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற வேண்டும் என பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனை தீவிரப்படுத்தும் வகையில், […]

You May Like