3 நாட்களில் இத்தனை கோடியா..? வசூலை வாரிக் குவித்த ’லவ் டுடே’..!!

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ திரைப்படம் 3 நாட்களிலேயே சுமார் 27 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் புரிந்துள்ளது.


ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக தனது ‘App(A) Lock’ என்ற குறும்படத்தை, ‘லவ் டுடே’ என்றப் பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். இந்தப் படத்தை இயக்கியது மட்டுமின்றி நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’, சுந்தர் சி-யின் ‘காஃபி வித் காதல்’ ஆகியப் படங்களுக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம், 3 நாட்களிலேயே உலகம் முழுவதும் சுமார் ரூ. 27 கோடி வசூலித்துள்ளது.

3 நாட்களில் இத்தனை கோடியா..? வசூலை வாரிக் குவித்த ’லவ் டுடே’..!!

குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 3 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தக் காலத்து காதல், நகைச்சுவை மற்றும் 2கே கிட்ஸ்-க்கு பிடித்த விதத்தில் இருப்பதால், திரையரங்குகளில் நல்ல வரவேற்பும், விமர்சகர்களிடையே பாசிட்டிவ் ரென்பான்ஸும் ‘லவ் டுடே’ படம் பெற்று வருகிறது. இதனால் மற்ற 2 படங்களைவிடவும், இந்தப் படத்திற்கான திரையரங்கு காட்சிகள் அரங்கு நிறைந்தே காணப்படுகிறது. வரும் நாட்களில் இந்தப் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

CHELLA

Next Post

நாளை முழு சந்திர கிரகணம்..!! தமிழ்நாட்டில் எப்போது பார்ப்பது..? எப்படி பார்ப்பது..?

Mon Nov 7 , 2022
சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. சென்னையில் மாலை ஐந்தரை மணி அளவில், சிறப்பு உபகரணங்கள் ஏதுமின்றி, வெறும் கண்ணால் நிலவின் அழகைக் கண்டு மகிழலாம். சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழல் நிலவின் மீது விழும்போது ஏற்படுவது. பூமியின் நிழல் கரு நிழலாக விழும் பகுதி Umbra என்றும் அதன் புற நிழல் பகுதி Penumbra என்றும் அழைக்கப்படுகிறது. கரு நிழலானது நிலவின் மீது முழுவதும் விழுவது முழு […]
eclipse

You May Like