ஏலக்காயின் வசீகரமான நறுமணமும், சுவையும் சமையலறையை தாண்டி, பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நிறைந்துள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. தினசரி காலையில் ஏலக்காய் ஊற வைத்த நீரை வெறும் வயிற்றில் குடிப்பதால், எண்ணற்ற மருத்துவப் பலன்களைப் பெறலாம்.
இந்த பானம் செரிமான மண்டலத்தின் நண்பனாக செயல்படுகிறது. காலையில் இதை அருந்துவது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, அஜீரணம், வயிறு உப்புசம், பேதி போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளையும் சரி செய்கிறது. மேலும், ஏலக்காய் நீரில் உள்ள டையூரிடிக் பண்புகள், இதை ஒரு சிறந்த டீ டாக்ஸ் பானமாக மாற்றுகிறது. இது உடலில் தேங்கியுள்ள கெட்ட நீரையும், நச்சுக்களையும் வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு அருமருந்தாகும். ஏனெனில், இது உடலின் மெட்டபாலிசத்தை சிறப்பாக செயல்பட தூண்டி, கலோரிகள் அதிகமாக எரிக்கப்பட உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதில் உள்ள ஆண்டி பாக்டீரியல் மற்றும் ஆண்டி ஃபங்கல் பண்புகள் காரணமாக, வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்கி புத்துணர்ச்சியையும், நல்ல நறுமணத்தையும் தருகிறது. தொண்டை கரகரப்பு மற்றும் வறட்சிக்கும் இது நிவாரணம் அளிக்கும்.
மேலும், இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து, சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் கடுமையான வயிற்று வலிக்கு ஏலக்காய் நீர் நல்ல தீர்வைத் தரும். இதில் உள்ள ஆன்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் வயிற்று வலியைக் குறைத்து, ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்யவும் உதவுகிறது. இறுதியாக, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் காலையில் இதை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம். எனவே, ஏலக்காய் நீரை தினசரி பழக்கமாக்கிக் கொண்டு உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.