இன்றைய உலகில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியினால் கிடைத்த பல விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டோம். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், இளம் தலைமுறையினர் சமூக வலைதளங்களில் மணிக்கணக்கில் மூழ்கி கிடக்கின்றனர். இதனால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 15 நிமிடம் வரை சமூகவலைதளங்களை பயன்படுத்தாமல் இருந்தால் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து பல்கலைக்கழக குழுவினர் 20 வயது முதல் 25 வயது வரை இருக்கும் 50 பேரிடம் மூன்று மாதங்கள் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் 15 நிமிடங்கள் சமூக ஊடகங்களின் பயன்பாட்டை குறைத்தால் அவர்களின் உடல் ஆரோக்கியம், உளவியல் செயல்பாடுகள் முன்னேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 நிமிடம் உபயோகிக்காவிட்டால் தற்போதைய இளைஞர்கள் உயிரைவிட்டுவிடுவர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இன்றைய கால இளம்தலைமுறையினர் அனைவரும் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.