ஆகஸ்ட் 2, 2025 அன்று ஒரு அரிய சூரிய கிரகணம், பூமியை 6 நிமிடங்கள் இருளில் ஆழ்த்துமா என்பது குறித்து நாசா விளக்கம் அளித்துள்ளது.
ஆகஸ்ட் 2, 2025 அன்று ஒரு அரிய சூரிய கிரகணம், பூமியை 6 நிமிடங்கள் இருளில் ஆழ்த்தும் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுகள் பரவலான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், இந்தக் கூற்றுகள் உண்மையில் தவறானவை என்று நாசா தெரிவித்துள்ளது.. ஒரு அரிய, நீண்ட சூரிய கிரகணம் உண்மையில் எதிர்பார்க்கப்பட்டாலும், அது இந்த ஆண்டு நிகழாது என்று நாசா விளக்கம் அளித்துள்ளது.. இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் ஆகஸ்ட் 2, 2027 அன்று நிகழும், 2025 இல் நிகழாது என்றும் நாசா கூறியுள்ளது..
2027 இல் நிகழும் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம்
ஆகஸ்ட் 2, 2027 அன்று நிகழ உள்ள சூரிய கிரகணம் 100 ஆண்டுகளில் மிக நீண்ட மொத்த கிரகணங்களில் ஒன்றாக இருக்கும் என்று நாசா உறுதி செய்துள்ளது. இந்த கிரகணத்தின் போது பூமி சுமார் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் என்றும் நாசா கூறியுள்ளது.. இந்த அரிய வான நிகழ்வு பல நூறு ஆண்டுகளாக நிகழ்வில்லை.. இந்த அரிய நிகழ்வு 2114 வரை மீண்டும் நிகழாது. இந்த கிரகணம் வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் தெரியும்.
2025 இல் சூரிய கிரகணம்: செப்டம்பர் 21 அன்று பகுதி கிரகணம்
2025 ஐப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 2 அன்று சூரிய கிரகணம் இருக்காது. அதற்கு பதிலாக, ஆண்டின் இரண்டாவது மற்றும் இறுதி சூரிய கிரகணம் செப்டம்பர் 21, 2025 அன்று நிகழும். இருப்பினும், இது ஒரு பகுதி சூரிய கிரகணமாக இருக்கும்.. முக்கியமாக, இது இந்தியாவில் தெரியாது.
செப்டம்பர் 21 கிரகணம் இந்திய நேரப்படி இரவு 10:59 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 22 அன்று அதிகாலை 3:23 மணிக்கு முடிவடையும். உச்சம் அல்லது நடுத்தர காலம் என்றும் அழைக்கப்படும் அதிகபட்ச கிரகண தருணம் இந்திய நேரப்படி அதிகாலை 1:11 மணிக்கு நிகழும். நிகழ்வின் மொத்த காலம் தோராயமாக 4 மணி நேரம் 24 நிமிடங்கள் இருக்கும்.
2025 கிரகணம் எங்கு தெரியும்?
இந்த கிரகணம் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் தெற்கு பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகளுக்கு மட்டுமே தெரியும். இந்த நிகழ்வு இந்தியாவில் தெரியாது..
சூரிய கிரகணம் என்றால் என்ன?
சூரியன் – சந்திரன் – பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும்.. இந்த நேரத்தில் பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படும்.. எனினும் சூரியனுடன் ஒப்பிடும் போது நிலவின் அளவு மிகவும் சிறியது என்பதால், நிலவால் சூரியனை மறைக்க முடியாது.. எனவே சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது, நிலவை சூரியன் மறைத்திருப்பதால் பார்ப்பதற்கு நெருப்பு வளையம் போல சூரியன் தோற்றமளிக்கும்..
Read More : ஆபரேஷன் அகல் : ஜம்மு காஷ்மீரில் மீண்டும் என்கவுண்டர்.. ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை..