சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..!! தீவிர கண்காணிப்பு..!! வெளியான முக்கிய அறிக்கை..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “சோனியா காந்தி வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார். ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனை அறக்கட்டளையின் தலைவர் டி.எஸ். ராணா கூறுகையில், “காய்ச்சல் காரணமாக சோனியா காந்திக்கு, மூத்த மருத்துவர் அருப் பாசு மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்


இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனியா காந்திக்கு தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

தமிழ்நாட்டில் 50 மாவட்டங்கள்..!! குண்டை தூக்கிப்போட்ட ஆர்.எஸ்.எஸ்..!! அதிர்ந்துபோன சுப்ரீம் கோர்ட்..!!

Fri Mar 3 , 2023
சட்டம்-ஒழுங்கு பிரச்சனையால் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு கட்டுப்பாடு அவசியமாகிறது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் 50 மாவட்டங்களில் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பேரணி விவகாரத்தில் தமிழக அரசு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும் ஆர்.எஸ்.எஸ். வழக்கறிஞர் கூறினார். இதனைக் கேட்ட தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் அதிர்ச்சி அடைந்து, தமிழகத்தில் 50 மாவட்டங்களா? நான் கேள்விப்பட்டதே இல்லை என கூறினார். பிரச்சனைகள் உள்ள இடங்களில் மட்டுமே பேரணி நடத்த அனுமதி மறுத்ததாகவும், […]

You May Like