அம்மனாக மாறிய சோனியா காந்தி..!! பிரம்மாண்ட கட் அவுட் வைத்த காங்கிரஸ்..!! கொந்தளிக்கும் பாஜக..!!

தெலங்கானா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது முதல்வராக உள்ள சந்திரசேகர் ராவை வீழ்த்தி ஆட்சியமைக்க பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. இதற்காக தெலங்கானாவிற்கு பாஜக, காங்கிரஸ் கட்சியின் மேல் மட்ட தலைவர்கள் அடிக்கடி விசிட் அடித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வருகை தந்தனர். சோனியா காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் பேனர்களையும், போஸ்டர்களையும், கட் அவுட்களையும் வைத்திருந்தனர். குறிப்பாக சோனியா காந்தியை அம்மனாக சித்தரித்து பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது.

சோனியா காந்தியின் தலையில் கிரீடம், நகை அணிந்தபடி அம்மன் போலவே சித்தரித்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. சோனியா காந்தியை தெலங்கானா மாநிலத்தின் அன்னை எனவும் பெரிய அளவில் வாசகங்களை எழுதியிருந்தனர். சோனியா காந்தியை அம்மனாக சித்தரித்து கட் அவுட்கள் வைத்தற்கு பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

Chella

Next Post

ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு இருக்கிறதா என்பதை எப்படி அறிந்து கொள்வது....? இதோ அதற்கான வழிமுறைகள்....!

Tue Sep 19 , 2023
முற்காலத்தில் நவதானிய உணவுகளையும், உடலுக்கு தேவைப்படும் அனைத்து விதமான சத்துக்களையும் வழங்கும் இயற்கையான உணவுகளை நாம் எடுத்துக் கொண்டோம். ஆனால், தற்போது அப்படி அல்ல, துரித உணவுகள் என்று சொல்லப்படும் பல்வேறு இன்னல்களை உடலுக்கு ஏற்படுத்தும் உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம். அதன் காரணமாக தான், இன்று நமக்கு பல்வேறு நோய்கள் வந்து சேருகின்றன. அதில் ஒரு முக்கிய பாதிப்பு தான் கல்லீரல் செயல் இழப்பது. தற்போது இந்த கல்லீரல் […]

You May Like