தென் மத்திய ரயில்வேயில் 2801 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களின்படி விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு குறைந்த பட்ச வயது 15 என்றும் அதிகபட்ச வயது 24 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு(PwD) 10 – 15 ஆண்டுகள் வரை வயதுவரம்பு தளர்வுகள் வழங்கப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
எலக்ட்ரீஷியன் (Electrician) – 1258
பிட்டர் (Fitter) – 539
ஏசி மெக்கானிக் (AC Mechanic) – 251
வெல்டர் (Welder) – 202
கோபா (COPA) – 181
டீசல் மெக்கானிக் (Diesel Mechanic) – 105
எலக்ட்ரானிக் மெக்கானிக் (Electronic Mechanic) – 88
மெஷினிஸ்ட் (Machinist) – 54
இண்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ் (Industrial Electronics) – 33
பெயிண்டர் (Painter) – 32
MMTM – 24
தச்சர் (Carpenter) – 22
மோட்டார் மெக்கானிக் (Motor Mechanic) – 12
கல்வித்தகுதி: அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு / SSC-ல் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பிரிவில் (Trade) ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தென் மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது? https://www.scr.indianrailways.gov.in/ என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கடைசி தேதி: 11.04.2026 இதற்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி ஆகும்.



