3 முறை திருமணம் செய்து கொண்ட தென்னிந்திய ஹீரோயின்கள்.. லிஸ்டில் யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க..!

Mariage wedding

திரையுலகில் 2-வது திருமணம், 3-வது திருமணம் என்பதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயம்.. அந்த வகையில் சில தென்னிந்திய கதாநாயகிகள் தனிப்பட்ட காரணங்களுக்காக மூன்று முறை திருமணம் செய்து கொண்டனர். இந்த நடிகைகளின் திரை வாழ்க்கை நன்றாக இருந்தபோதிலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்தனர். அந்த கதாநாயகிகள் யார் யார் என்று பார்க்கலாம்..


நடிகை வனிதா விஜயகுமார்

வனிதா தமிழ் நடிகர் விஜயகுமாரின் மகள். இவர் விஜய்யின் சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.. பின்னர் ஒரு சில படங்களில் அவர் நடித்தார்.. எனினும் அந்த படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள படங்களிலும் வனிதா விஜயகுமார் திரைப்படங்களில் நடித்தார்.. பின்னர் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமானா வனிதா..

நடிகை வனிதா அவர் தனது வாழ்க்கையில் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை அவரது வாழ்க்கையை விட செய்திகளில் அதிகமாக இருந்தது. அவர் முதலில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார்.. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரு பிள்ளைகள்..

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி விவாகரத்து செய்தது. பின்னர், அவர் தொழிலதிபர் ஆனந்த் ஜெயராஜனை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். அவருடன் பிரிந்த பிறகு, பீட்டர் பால் என்ற நபரை மணந்தார். பின்னர் அவர்கள் பிரிந்துவிட்டனர். தற்போது அவர் தனது இரண்டு மகள்களுடன் வாழ்கிறார்.

நடிகை லட்சுமி

பிரபல நடிகை லட்சுமியும் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவர் முதலில் பாஸ்கர் என்ற ஒருவரை மணந்தார். அவர்களுக்கு ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். இவரும் பிரபல நடிகை.. பாஸ்கரை விவாகரத்து செய்த பிறகு, நடிகர் மோகன் சர்மாவை மணந்தார். பின்னர் இவர்கள் விவாகரத்து செய்தனர்.. பின்னர், நடிகை லட்சுமி நடிகரும் இயக்குநருமான சிவச்சந்திரனை மணந்து செட்டில் ஆனார். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ராதிகா சரத்குமார்

நடிகை ராதிகா சரத்குமார் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். முதலில், நடிகர் பிரதாப் போத்தனை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். பின்னர் வெளிநாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டியை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஒரு வருடம் கழித்து இருவரும் பிரிந்தனர். பின்னர், நடிகர் சரத்குமாரை மணந்து தற்போது அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் ஒரு மகன் உள்ளார்.

நடிகை சரிதா

தமிழ், கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சரிதா. இவர் 80-களில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.. நடிகை சரிதாவும் 3 முறை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. முதலில் வெங்கட சுப்பையாவை மணந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, விவாகரத்து பெற்று மலையாள நடிகர் முகேஷை மணந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. இருப்பினும், வெங்கட சுப்பையாவை மணப்பதற்கு முன்பு அவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.

RUPA

Next Post

உலகை வலம் வந்த பிரதமர் மோடி..!! 4 ஆண்டுகளில் இத்தனை கோடி செலவு செய்துள்ளாரா..? வெளியான புள்ளி விவரங்கள்..!!

Thu Feb 12 , 2026
பிரதமர் நரேந்திர மோடியின் உலகளாவிய பயணங்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள பொருளாதாரச் செலவினங்கள் குறித்த விரிவான புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சர்வதேச உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தக ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் இத்தகைய பயணங்களுக்கு, கடந்த 2021 முதல் 2025 வரையிலான 4 ஆண்டுகளில் மட்டும் இந்திய அரசு சுமார் 462.58 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. அண்மையில் தனது இரண்டு நாள் மலேசிய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நாடு […]
Modi 2026

You May Like