தெற்கு கலிபோர்னியாவிலிருந்து லாஸ் வேகாஸுக்குச் சென்ற சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே 475 அடி உயரத்திற்கு திடீரென பல்டி அடித்ததது. இதில் விமானத்தில் இருந்த 2 விமானப் பணியாளர்கள் காயமடைந்தனர்..
சவுத்வெஸ்ட் விமானம் 1496 நேற்று காலை ஹாலிவுட் பர்பாங்க் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு லாஸ் வேகாஸுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. சவுத்வெஸ்d விமானம் பறந்து கொண்டிருந்த போது, வானில் பறந்த மற்றொரு விமானம் N335AX என்ற விமானமும் பறந்துள்ளது.. இது சுமார் 14,653 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இந்த விமானத்துடனான மோதலை தவிர்க்கவே சவுத்வெஸ்ட் விமானம் 475 அடி உயரத்திற்கு தலைகீழாக பல்டி அடித்தது.. நடுவானில் பறந்து கொண்டிருந்த விமான திடீரென கீழே இறங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விமான நிறுவனமும் பயணிகளும் இந்த தகவலை உறுதிப்படுத்தினர். இதனால் நடுவானில் ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது..
ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தின் (FAA) படி, சவுத்வெஸ்ட் ஜெட் விமானம் அருகிலுள்ள மற்றொரு விமானத்தைக் கண்டறிந்த உள் மோதல் எச்சரிக்கை அமைப்புக்கு பதிலளித்தது. இந்த சம்பவம் குறித்து FAA விசாரணையைத் தொடங்கியுள்ளது. விமானத்தின் இயக்கத்தைக் காட்டும் Flightradar வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
“விமானிகள் ஏறி இறங்க வேண்டிய இரண்டு விமான எச்சரிக்கைகளுக்கு விமானக் குழுவினர் பதிலளித்தனர்,” என்று சவுத்வெஸ்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திடீரென விமானம், வேகமாக கீழே விழுந்ததால், பயணிகள் தங்கள் இருக்கைகளில் இருந்து ‘மேலே பறந்து சீலிங்கில் மொதிக்கொண்டனர்.
பயணிகள் சமூக ஊடகங்களில் இந்த துயரமான தருணத்தை விவரித்தனர். விமானத்தில் இருந்த ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் ஜிம்மி டோர் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ நானும் ஏராளமான மக்களும் தங்கள் இருக்கைகளில் இருந்து பறந்து சீலிங்கில் மோதிக்கொண்டோம், ஒரு விமானப் பணிப்பெண்ணுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. விமானி தனது மோதல் எச்சரிக்கை ஒலித்ததாகவும், விமானம் எங்களை நோக்கி வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்..” என்று பதிவிட்டுள்ளார்.
கெய்ட்லின் என்ற பயணி இதுகுறித்து பேசிய போது ” விமானம் புறப்பட்ட சுமார் 10 நிமிடங்களில், நாங்கள் வெகுதூரம் சரிந்தோம், நான் சுற்றிப் பார்த்தேன், எல்லோரும், ‘ அது சாதாரணமானது’ என்று சொன்னார்கள். பின்னர், 20 முதல் 30 அடி உயரத்தில் விமானம் விழுந்தது.. அலறல், அது பயங்கரமாக இருந்தது. நாங்கள் ஒரு விமான விபத்தில் விழுந்து கொண்டிருக்கிறோம் என்று உண்மையில் நினைத்தோம்,” என்று அவர் கூறினார்.
ஜனவரி மாதம் வாஷிங்டன், டி.சி.யில் 67 உயிர்களைக் கொன்ற ஒரு கொடிய நடுவானில் மோதியதைத் தொடர்ந்து, விமானப் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்து வருவதற்கு மத்தியில் இந்த தவறு நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.