fbpx

முதல்வரின் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு… என்னென்ன சிகிச்சைகள் பெறலாம்…? முழு விவரம்…

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் பற்றி பார்க்கலாம்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களால் 23-07-2009 அன்று துவங்கப்பட்டு இதுநாள் வரையில் மக்களுக்கு சிறப்பான சேவையை தமிழக முதல்வர் அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 15-09-2018 முதல் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து செயல்படுகிறது.

ஆண்டுதோறும் இதனை கொண்டாடும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- வரை குறைவாக உள்ள குடும்பங்களுக்கு வருடத்திற்கு ரூ.5,00,000/- வரை அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெறலாம்.

ஒருங்கிணைக்கப்பட்ட இத்திட்டத்தில் 1513 சிகிச்சை முறைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் 8 சிறப்பு உயர் சிகிச்சை முறைகளும் 52 முழுமையான பரிசோதனை முறைகளும் 11 தொடர் சிகிச்சை முறைகளும் அடங்கும். இத்திட்டத்தின் கீழ் 975 தனியார் மற்றும் 854 அரசு மருத்துவமனைகள் என ஆக மொத்தம் 1829 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் முக்கிய சிறப்பு அம்சமாக அதிக செலவாகும் 8 உறுப்பு மாற்று உயர் சிறப்பு சிகிச்சைகளான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்புமஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, காதுவால் நரம்பு உள்வைப்பு அறுவை சிகிச்சை, ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை. இருதய மாற்று அறுவை சிகிச்சை. நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை. செவிப்புல மூளைதண்டு உள்வைப்பு அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தேவைப்படும் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

Vignesh

Next Post

"தோல்வி கற்றலின் முதல் முயற்சியை குறிக்கிறது"!... இன்று உலக மாணவர் தினம்!

Sun Oct 15 , 2023
இந்திய இளைஞர்கள், மாணவர்களின் கனவு நாயகனாக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த தினமான இன்று (அக்டோபர் 15 ஆம் தேதி) உலக மாணவர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வி மற்றும் மாணவர்களுக்காக அப்துல் கலாம் செய்த சேவைகள் மற்றும் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக 2011 ஆம் ஆண்டு இவரின் பிறந்த நாளை உலக மாணவர் தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. அப்துல் கலாம் எப்போதும் மாணவர்களே எதிர்காலம் […]

You May Like