துணை தேர்வில் அரியர் வைத்த மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு…! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

college admission 2025

துணை தேர்வில் அரியர் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் டிப்ளமா தேர்வில் இறுதி செமஸ்டர் மற்றும் துணை தேர்வை எழுதிய மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் அரியர் வைத்துள்ளனர். அம்மாணவர்கள் உயர்கல்வி பயிலவும் வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டும் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்து ஜூன், ஜூலையில் ஒரு சிறப்பு துணை தேர்வு நடத்துவதன் மூலம் அரியர் பாடங்களை எழுத வாய்ப்பு வழங்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வரின் அறிவுரையின் பேரில், அம்மாணவர்களுக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்காக ஜூன், ஜூலையில் சிறப்பு துணை தேர்வு நடத்தப்படும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கி 23-ம் தேதி முடிவடையும். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு ஜூன் 25-ம் தேதி பதிவேற்றம் செய்யப்படும். பாடத்தேர்வு ஜூன் 30 முதல் ஜூலை 16 வரை நடைபெறும்.

செய்முறைத்தேர்வுகள் ஜூலை 17 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும். தேர்வு முடிவுகள் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும். சிறப்பு துணைத்தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.30.தேர்வு கட்டணம் (ஒரு பாடத்துக்கு) ரூ.65. அரியர் வைத்துள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உயர் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read more: சிவனின் புனித பாதம் இருக்கும் அதிசய தலம்.. எங்க இருக்கு தெரியுமா..?

Vignesh

Next Post

மகிழ்ச்சி செய்தி...! வெளிநாடு செல்ல NOC... அரசு ஊழியர்களுக்கு ஈசியாக பாஸ்போர்ட்...! அரசாணை வெளியீடு

Wed Jun 18 , 2025
அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும் வெளிநாடு செல்வதற்கும் தடையில்லா சான்று பெறுவதற்காக எளிய முறையில் விண்ணப்பிப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியீடு. வெளிநாடு பயணிக்கும் நபர்கள் வைத்திருக்க வேண்டிய அடிப்படையான ஆவணம் பாஸ்போர்ட். இதை பெறுவதற்கு ஒவ்வொரு அரசும் பிரத்யேக நடைமுறைகளை வைத்திருக்கின்றன. அதன்படி, இந்திய அரசு பிரத்யேக இணையதளம், பாஸ்போர்ட் அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும், வெளிநாடு செல்வதற்கும் தடையில்லா சான்று (NOC) […]
Tn Govt 2025

You May Like