மாநிலங்கள் மற்றும் உள்ளூர் சமூக அமைப்புகளின் கூட்டு செயல்பாட்டுடன் கல்வியில் பாலின சமத்துவத்தை அடைவதற்கான நடைமுறைகளை இது பரிந்துரைக்கிறது. சமக்ரா சிக்ஷா திட்டத்தின் 2-வது கட்டத்தின் கீழ், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிப்பதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.கஸ்தூரிபா காந்தி மழலையர் பள்ளிகள் மூலமாக பள்ளிக் கல்வியில் பாலின இடைவெளியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மொத்தம் 5,646 கஸ்தூரிபா காந்தி மழலையர் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு 6,69,000 பெண் குழந்தைகள் இதில் சேர்ந்துள்ளனர்.புதிய கல்விக்கொள்கை தொடர்பாக மத்திய அரசின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை சமூக வலைதளங்ளகளில் விரிவாக மற்றும் வெற்றிகரமான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது.