மகிழ்ச்சி…!வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்… ஆன்லைன் மூலம் நிரப்பும் வசதி அறிமுகம்…!

sir 2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் நிரப்பும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வாக்காளர்கள் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in -ல் எஸ்ஐஆர் படிவத்தை ஆன்லைனில் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி இணையதளம் மூலம் உள் நுழைய பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும். உள்நுழைந்த பின் னர் அந்த இணைய பக்கத்தில் காட்டப்படும் “Fill Enumeration Form” என்ற இணைப்பினை தேர்வு செய்யலாம்.

இந்த வசதியை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரும், ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு வாக்காளர், இணையப்பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். சரியான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு இணைய பக்கமானது இ-சைன் (e-sign) பக்கத்துக்கு மாறும். அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்படும். அந்த ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும்.

தங்களது செல்போன் எண்களை பதிவு செய்திருக்கும், மேலும் வாக்காளர் பட்டியல் மற்றும் ஆதார் பதிவுகளில் பெயர் பொருந்தி உள்ள வாக்காளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சரவெடி!. 8 பந்துகளில் 8 சிக்ஸர்!. 11 பந்துகளில் அரைசதம்!. யுவராஜ் சிங், ரவி சாஸ்திரியின் சாதனையை முறியடித்த ஆகாஷ் சவுத்ரி யார்?.

Mon Nov 10 , 2025
ரஞ்சி டிராபியில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக மேகாலயாவின் ஆகாஷ் சவுத்ரி எட்டு பந்துகளில் எட்டு சிக்ஸர்களை விளாசி, யுவராஜ் சிங் மற்றும் ரவி சாஸ்திரியின் சாதனையை முறியடித்தார். முதல் தர கிரிக்கெட்டில் வேகமான அரைசதம் என்ற சாதனையையும் அவர் படைத்தார், வெறும் 11 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். கிரிக்கெட் உலகில் இந்தியாவின் சிக்ஸர் விளாசல் வாழ்க்கை பற்றி விவாதிக்கப்படும் போதெல்லாம், முதலில் நினைவுக்கு வருவது யுவராஜ் சிங் மற்றும் […]
Akash Chaudhary

You May Like