பீகார் போல தமிழகத்திலும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்…! தேர்தல் ஆணையம் ஆலோசனை…!

election 2025

பீகாரில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையை பின்பற்றி 2026 தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு.


மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் நடத்திய 2 நாள் ஆலோசனை கூட்டம் நேற்று நிறைவடைந்தது. டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் வாக்காளர் பட்டியல் மேலாண்மை நிறுவன வளாகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடு முழுவதிலிருந்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர். அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தயார் நிலையை இறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் சிறப்பு தீவிர திருத்த நடைமுறைகள் குறித்து விளக்கம் அளித்தபின் தலைமை தேர்தல் அதிகாரிகள் எழுப்பிய சந்தேகங்களை தெளிவுபடுத்தினர்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த முறை மேற்க்கொள்ளப்பட்ட வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தங்களுடன் தற்போதைய வாக்காளர்களை இணைப்பது குறித்த தேர்தல் ஆணையம் ஏற்கனவே தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அளித்துள்ள அறிவுறுத்தல்களின் நிலை குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டது.விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் நேரடியாக கலந்துரையாடினர்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த முறை மேற்க்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்ற தேதி, வாக்காளர் பட்டியல், வாக்காளர் எண்ணிக்கை குறித்த விரிவான தகவல்களை கடந்த செப்டம்பர் மாதம் 10-ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கியுள்ளதை அடுத்து நடைபெறும் ஆலோசனை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது

பீகாரில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையை பின்பற்றி 2026 தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு. அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் முதல் வாரத்தில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vignesh

Next Post

Rasi palan | இன்று இந்த ராசிக்காரர்கள் பெண்கள் விஷயத்தில் கவனமா இருக்கனும்..!! 12 ராசிக்குமான ராசிபலன் இதோ..

Fri Oct 24 , 2025
Rasi palan | Today, these zodiac signs should be careful about women..!
zodiac signs who did not fear

You May Like