கார்த்திகை அமாவாசையன்று விரதம் இருந்து வழிபாடு நடத்தினால் குழந்தை பாக்கியம் பெறலாம் என்று முன்னோர்கள் சாஸ்திரத்தில் கூறியுள்ளனர்.
கார்த்திகை மாதம் முழுவதுமே சிவன், முருகன், ஐயப்பன் கோயில்களில் கோலாகலமான வழிபாடு இருக்கும். அதிலும் கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமி நாள் எந்தஅளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு கார்த்திகை அமாவாசைக்கும் முக்கியத்தும் அளிக்கப்படுகின்றது. இந்த மாதத்தில் வரும் அமாவாசை நாளில் பாற்கடலில் லட்சுமி தேவி அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
நாளை (23.11.2022) கார்த்திகை அமாவாசை என்பதால் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் ஏராளமான பலன்களை வழங்கும். கார்த்திகை அமாவாசை நாளில் ஆறு குளம் போன்ற நீர் நிலைகளில் புனித நீராடும்போது கங்கையில் நீராடியதற்கு சமமான புண்ணியம் கிடைக்கும்.
பசு அல்லது காகம் இவற்றிற்கு உணவளித்த பின்னர் மக்களுக்கு அன்னதானம் செய்வது கோடி மடங்கு புண்ணியம் பெரும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதம் விரதம் இருந்து அரசமரத்தை சுற்றி வழிபடும்போது குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது முன்னோர்களின் ஆணித்தனமான நம்பிக்கை.