fbpx

KiraduTemple: 6 மணிக்கு மேல் இந்த அமானுஷ்ய கோயிலுக்கு சென்றால் மனிதர்கள் கல்லாகி விடுகின்றனர்.! என்ன காரணம்.?

Kiradu Temple: பொதுவாக கோயில்கள் ஆன்மீகத்தையும்,  அந்த காலத்தின் கட்டிட கலையையும், வரலாற்றையும் பறைசாற்றும் விதமாகவே கட்டப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சில கோயில்கள் அதற்கு எதிர்மாறாக வித்தியமான அம்சங்களை கொண்டுள்ளது. பக்தர்கள் பலரும் கோயிலுக்கு செல்லவே விரும்புவார்கள். ஆனால் இந்த கோயிலுக்கு செல்லவே பக்தர்கள் பயப்படுகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா.?

ஆம்! ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள கிரடு என்ற கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயத்துடன் தான் கடவுளை தரிசனம் செய்கின்றனர். மாலை 6 மணிக்கு மேல் இந்த கோயிலில் இருந்தால் அவர்கள் கல்லாகி விடுகின்றனர் என்பதே இவர்களின் பயமாக இருந்து வருகிறது. மாலை நேரத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் 6 மணி முடிவதற்குள் கோயிலை விட்டு ஓடி விடுகின்றனர்.

மேலும் இந்த கிரடு கோயிலுக்கு அருகில் ஒரு முனிவர் வந்ததாகவும், அவரை இந்த ஊர் மக்கள் துன்புறுத்தியதால் அவரளித்த சாபத்தினால் தான் இக்கோயிலில் மனிதர்கள் கல்லாக மாறும் அமானுஷ்யங்கள் நடக்கிறது என்று ராஜஸ்தான் மாநில மக்கள் கூறுகின்றனர். அந்த முனிவர் தற்போதும் கோயிலில் தான் பேயாக உள்ளார் என்றும் அந்த ஊர் மக்களால் நம்பப்பட்டு வருகிறது.

இக்கோயிலில் உள்ள சுவர்கள், அனைத்திலும் மனிதர்களைப் போலவே சிலைகள் உள்ளது. இதைக் குறித்து தொண்டு நிறுவனங்கள் விசாரிக்கும் போது இக்கோயிலில் ஆறு மணிக்கு மேல் தங்கி இருப்பவர்கள் காணாமல் போனதாகவும், அவர்கள் சிலையாக தான் மாறிவிட்டார்கள் என்று இந்த ஊர் மக்கள் நம்பி வருகின்றனர் என்றும் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயில் தற்போது அமானுஷ்யத்திற்கும், மக்களின் பயத்திற்கும் பெயர் பெற்ற கோவிலாக இருந்து வருகிறது.

English summary : People turn to stone if they go to this supernatural temple after 6 o’clock.

Read more : கண் பார்வையை தெளிவாக்கும் செவ்வாழை பழம்.! வேறு என்னென்ன நன்மைகள் உள்ளன தெரியுமா .!?

Rupa

Next Post

Monkey fever vaccine:நடப்பாண்டு இறுதியில் குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி!… சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்!

Tue Feb 20 , 2024
Monkey fever vaccine:நடப்பாண்டு இறுதியில் குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது என கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல் தெரிவித்துள்ளார். சட்டமேலவை பூஜ்ய வேளையில், பா.ஜ., உறுப்பினர் அருண் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குண்டுராவ், குரங்கு காய்ச்சலுக்கு, தடுப்பூசி தயாரிப்பது தொடர்பாக, ஐ.சி.எம்.ஆர்., அனுமதி அளிக்க வேண்டும். ஏற்கனவே பல்வேறு கட்டங்களில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. நடப்பாண்டு இறுதியில் தடுப்பூசி கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஷிவமொகா, […]

You May Like