fbpx

மாசி பௌர்ணமி வழிபாடு : அரசியல் அதிகாரம், பதவி உயர்வு கிடைக்க இந்த வழிபாடு பண்ணுங்க.!?

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் மாசி மாதத்தை மகத்துவமான மாதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாசி மாதத்தில் இன்று பௌர்ணமி என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்பட்டு வருகிறது. எனவே மாசி மாத பௌர்ணமியில் வழிபாடு செய்தால் அரசியல், அதிகாரம், பதவி உயர்வு என பல நன்மைகள் கிடைக்கும்.

அனைத்து விதமான செல்வங்களும் உயர் பதவிகளும் கிடைப்பதற்கு இந்த பௌர்ணமி வழிபாடு செய்வது நல்லது. பௌர்ணமி நாட்களில் துர்க்கை அம்மனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் சகல நன்மைகளும், செல்வங்களும் நம்மை வந்து சேரும். இந்த வழிபாடு எப்படி செய்யலாம் என்பதை குறித்து விளக்கமாக பார்க்கலாம்.

பொதுவாக மாசி பௌர்ணமி அன்று மாசி மகம் கொண்டாடப்படுகிறது. மாசி மகத்தன்று காலையிலே எழுந்து நீராடி விரதம் இருந்து அருகில் இருக்கும் துர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வேண்டி வந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

மேலும் சிவன் கோயிலுக்கு சென்று சர்க்கரை பொங்கலை நெய்வேத்தியமாக ஈசனுக்கு படைத்தால் பல நன்மைகள் உண்டாகும். குறிப்பாக சிவ தீட்சை பெற்ற யோகத்தை தரும். மாசி பௌர்ணமி அன்று சத்யநாராயண பூஜை வீட்டில் செய்து சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு துர்க்கை அம்மனை வழிபட்டு வந்தால் அரசியல், தொழில், பணவரவு, நோய்நொடிகள் நீங்குவது போன்ற பல நன்மைகள் ஏற்படும்.

English summary : special worship in the month of Masi

Read more :

Rupa

Next Post

X: விவசாயிகள் போராட்டம்!… மத்திய அரசின் உத்தரவில் உடன்பாடில்லை!… எக்ஸ் நிறுவனம் காட்டம்!

Fri Feb 23 , 2024
X: சில குறிப்பிட்ட எக்ஸ் கணக்குகளை தற்காலிகமாக முடக்கும்படி உத்தரவிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று எக்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். இதில் விவசாயிகளை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இந்தநிலையில் விவசாயிகள் நடத்தி வரும் பேரணியுடன் தொடர்புடைய 177 சமூக வலைதள கணக்குகளை தற்காலிகமாக முடக்கும்படி, […]

You May Like