லக்னோவில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு 250 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
லக்னோவில் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. மழை குறுக்கிட்ட நிலையில் போட்டி தொடங்க தாமதம் ஆனது. எனவே 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிதனமாக விளையாடியது தொடக்க ஆட்டக்காரர் மலான் 22 ரன்களில் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த கேப்டன் பவுமாவும் 8 ரன்களில் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
விளையாடிய விக்கெட் கீப்பர் டி காக் 48 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். 110 ரன்களில் 4 விக்கெட்டை இழந்து தடுமாறிய தென் ஆப்பிரிக்கா அணி, பின்னர் ஹென்ரிச் கால்சானும் டேவிட் மில்லரின் அதிரடி ஆட்டத்தில் அணியின் ரன்களை உயர்தியது. இறுதியில் 40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட்டை இழந்து 249ரன்களை சேர்ந்தது. ஹென்ரிச் கால்சான் 74 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஷ்னாய் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.