fbpx

அடேங்கப்பா..!! சில நிமிடங்களில் காலியான இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள்..!

உலகக் கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை துவங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்கப்பட்டுவிட்டதாக ஐசிசி அறிவித்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கொரோனா காரணமாக 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்பு கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை போட்டியும் கொரோனா காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவில் 8-வது டி20 உலகக் கோப்பை போட்டி வருகிற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

அடேங்கப்பா..!! சில நிமிடங்களில் காலியான இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள்..!

இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடுகின்றன. முதல் சுற்றில் நமீபியா, நெதர்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் குரூப் ஏ பிரிவில் பிரிக்கப்பட்டு மோதுகின்றன. குரூப் பி பிரிவில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, மேற்கு இந்திய தீவுகள், ஜிம்பாம்பே ஆகிய நாடுகள் மோதுகின்றன.

அடேங்கப்பா..!! சில நிமிடங்களில் காலியான இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள்..!

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் அக்டோபர் 23ஆம் தேதி பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் மெல்போர்ன் மைதானத்தில் மோதுகிறது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இந்திய அணி, இந்தப் போட்டியில் பழி தீர்க்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாக அனைத்து போட்டிகளுக்கும் இதுவரை 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

Chella

Next Post

முத்துக்குமரன் உடல் நாளை தமிழகம் கொண்டு வரப்படுகின்றது… மறுவாழ்வுத்துறை ஆணையரகம் நடவடிக்கை ….

Thu Sep 15 , 2022
குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கூத்தா நல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் நாளை தமிழகம் வந்தடைய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் கடந்த செப்டம்பர் 3 ம் தேதி வேலைக்குச் சென்றார். இங்கிருந்து சென்றபோது நல்ல வேலை தருவதாக ஐதராபாத் நிறுவனம் குவைத்திற்கு முத்துக்குமாரை அனுப்பியுள்ளது. அங்கு சென்றபோதுதான் தெரிந்தது ஒட்டகத்தை பராமரிக்கும் வேலை என்று. .. இது பற்றி […]

You May Like