fbpx

அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்..!! பணிந்தது இலங்கை..!! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!!

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 12’ சுற்றில் ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் நேற்று மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பத்தும் நிசங்க 45 பந்துகளில் 40 ரன்களும், சரித் அசலங்கா 25 பந்துகளில் 38 ரன்களும், தனஞ்சய டி சில்வா 23 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தனர்.

அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்..!! பணிந்தது இலங்கை..!! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!!

இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 11 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 17 ரன்னிலும், மேக்ஸ்வெல் 23 ரன்னிலும் அவுட் ஆகினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் ஆரோன் பின்ச் நிதானமாக ஆடினார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். அவர் 17 பந்தில் அரை சதமடித்தார்.

அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்..!! பணிந்தது இலங்கை..!! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!!

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்து இலக்கை விரட்டிப்பிடித்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்டோய்னிஸ் 18 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 59 ரன்னும், ஆரோன் பின்ச் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Chella

Next Post

’எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம்... விராட் கோலியை கொடுங்கள்’..!! பாகிஸ்தான் ரசிகர்களால் பரபரப்பு..!!

Wed Oct 26 , 2022
“காஷ்மீர் வேண்டாம்… விராட் கோலியை கொடுங்கள்” என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொடிபிடித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 23ஆம் தேதி மெல்போர்னில் நடைபெற்ற ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதனால் வழக்கம்போல் ஆட்டத்தில் அனல் பறந்தது. ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்த இந்த ஆட்டத்தில் 53 பந்துகளில் […]
’எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம்... விராட் கோலியை கொடுங்கள்’..!! பாகிஸ்தான் ரசிகர்களால் பரபரப்பு..!!

You May Like