கொச்சியில் நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு தமிழக வீரரை கூட தேர்வு செய்யாமல் இருந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் நடத்தும் டிஎன்பிஎல் தொடரிலிருந்து ஏகப்பட்ட வீரர்கள் விளையாட வருகின்றனர். ஆனால் இவர்களில் யாராவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினால் அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் பெருமையாக இருக்கும். ஆனால் கொச்சியில் நடந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு தமிழக வீரரை கூட தேர்வு செய்யாமல் இருந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.
சிஎஸ்கே விடுவித்த நாராயணன் ஜெகதீசன், தமிழக ஆல்ரவுண்டர் பாபா இந்திரஜித், சஞ்சய் யாதவ் ஆகியோர்ர் சிஎஸ்கே அணியால் எடுக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கும் சிஎஸ்கே கைவிட்டுவிட்டது. ஒரு காலத்தில் அஸ்வின், முரளி விஜய், பத்ரிநாத், பாலாஜி என தமிழக வீரர்கள் சிஎஸ்கே அணியில் முக்கிய அங்கம் வகித்தனர். ஆனால் தற்போது சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறுவதில்லை. ஏலத்தில் கூட சிஎஸ்கே தமிழக வீரர்களை தேர்வு செய்வதில்லை. இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தையும் ஆத்திரத்ததையும் ஏற்படுத்தி உள்ளது. மாறாக இம்முறை 2 இலங்கை அணி வீரர்கள் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள். இது தமிழர்களை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் செயல் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.