fbpx

கிரிக்கெட் வீரர் ஆகாமல் இருந்திருந்தால்..? ருதுராஜ் கெய்க்வாட் ஓபன் டாக்..!!

கிரிக்கெட் வீரர் ஆகாமல் இருந்திருந்தால், டென்னிஸ் வீரராகியிருப்பேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஆடம்பர கேளிக்கை விடுதி ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சென்னைக்கு மீண்டும் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை எப்போதும் தனக்கு ஏராளமான அன்பையும் ஆதரவையும் அளித்திருக்கிறது. சென்னையில் கிடைக்கும் உணவு தனக்கு மிகவும் பிடிக்கும். இங்கு தென் இந்திய உணவுகள் கிடைக்கும்.

கிரிக்கெட் வீரர் ஆகாமல் இருந்திருந்தால்..? ருதுராஜ் கெய்க்வாட் ஓபன் டாக்..!!

மேலும், கிரிக்கெட் வீரர்களிலேயே தனக்கு மிகவும் பிடித்தவர் தோனிதான். தான் கிரிக்கெட் வீரராகாமல் இருந்திருந்தால், டென்னிஸ் வீரராகியிருப்பேன்” என்றார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் ருதுராஜ் கெய்க்வாட், அண்மையில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் ஒரே ஓவரில் 7 சிக்சர் அடித்து உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

சூட்கேஸில் பெண்ணின் உடல்..!! மீண்டும் அதிரும் டெல்லி..!! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

Thu Dec 8 , 2022
டெல்லியில் கழிவுநீர் வாய்க்காலில் இறந்த நிலையில், ஒரு பெண்ணின் உடல் சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் கொடூரமாக கொன்று துண்டு துண்டாக வெட்டிய கொலை சம்பவம் நாட்டையே நடுநடுங்க வைத்தது. இதனை அடுத்தும் ஒரு சில சம்பவங்கள் இதேபோல இந்தியாவில் அறங்கேறியுள்ளன. அந்த வகையில், டெல்லியில், அதே போல உயிரிழந்த ஒரு பெண்ணின் உடல் சூட்கேசில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. […]
சூட்கேஸில் பெண்ணின் உடல்..!! மீண்டும் அதிரும் டெல்லி..!! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

You May Like