இந்திய அணி வீரர் மயங்க் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் மயங்க் அகர்வால். இவர் தொடக்க ஆட்டக்காரர் என்ற பெயர் பெற்றவர். இவர் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இவர், பெங்களுருவில் பிசப் காட்டன் ஆண்கள் பள்ளியிலும், ஜெயின் பல்கலைக் கழகத்திலும் பயின்ற மாணவர் ஆவார். இவர் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
இந்நிலையில், இந்திய அணி வீரர் மயங்க் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை மயங்க், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ’அயன்ஷ்’-ஐ எங்கள் இதயம் நிறைந்த அன்புடன் அறிமுகப்படுத்துகிறோம் என்றும் அயன்ஷ் கடவுள் கொடுத்த வரம் என்றும் மயங்க் அகர்வால் பதிவிட்டுள்ளார். விராட் கோலி உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.