பல்வேறு சலுகைகளை அறிவித்து வரும் ஜியோ நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்கள் ஃபிபா உலக கோப்பை-2022வை கண்டுகளிக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஃபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி-2022 கத்தாரில் நடைபெற உள்ளது. போட்டிகள் நவம்பர் 20-ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகின்றது. டிசம்பர் 18 வரை நடைபெறும் இப்போட்டியை ஜியோ வாடிக்கையாளர்கள் தங்கள் பேக்கேஜிலேயே கண்டுகளிக்கலாம்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம் ஸ்போர்ட்ஸ் ஃபிபா உலககோப்பை நிகழ்வை அறிமுகம் செய்கின்றது. இதைக் காண ஜியோ சினிமா என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் நேரலையாக காணலாம். உலக கோப்பையை தமிழ், பெங்காலி, மலையாளம் ஆகிய மொழிகளில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஃபிஃபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்திவருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழா ஆகும்.