fbpx

சிஎஸ்கே அணியை விட்டு நிரந்தரமாக வெளியேறுகிறார் ஜடேஜா..? வெளியான முக்கிய அப்டேட்..!

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியை விட்டு முழுவதுமாக விலகுவதாக தகவல் கசிந்துள்ளது.

ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் 2022 முடிவடைந்ததில் இருந்து சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் முற்றிலும் தொடர்பில்லாமல் இருந்து வருகிறார். 2022 ஐபிஎல் தொடரின் முதலில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால், அணியின் தொடர் தோல்வியால், பின்னர் பாதியிலேயே கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலகினார். இந்நிலையில், அந்த விவகாரத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் ஜடேஜாவிற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் அதனால் அவர் சிஎஸ்கே அணிக்காக இனி விளையாடமாட்டார் எனவும் தகவல் வெளியாகியது.

சிஎஸ்கே அணியை விட்டு நிரந்தரமாக வெளியேறுகிறார் ஜடேஜா..? வெளியான முக்கிய அப்டேட்..!

பின்னர், சிஎஸ்கேவில் மேலும் 10 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்ற இதற்கு முன்னர் ஜடேஜா போட்டிருந்த பதிவை ரசிகர்கள் அனைவரும் பகிர்ந்து பதிவிட்ட நிலையில், அவர் அந்த பதிவை முற்றிலுமாக நீக்கினார். மேலும், சிஎஸ்கே தொடர்பாக போடப்பட்ட அனைத்து பதிவுகளையும் ஜடேஜா அதிரடியாக நீக்கினார். தொடர்ந்து சமீபத்தில் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிடப்பட்ட வீடியோவில் ஜடேஜா மட்டும் இடம்பெறாமல் பதிவிடப்பட்டது. இந்நிலையில், ட்ரேடிங் விண்டோ மூலம் தன்னை எடுக்க விரும்பும் அணிகள் பேச்சுவார்த்தையை தொடங்கலாம் என ஜடேஜா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், சிஎஸ்கே அணியை விட்டு ரவீந்திர ஜடேஜா முழுவதுமாக வெளியேறுவது உறுதியாகியுள்ளதாக தெரிகிறது.

Chella

Next Post

’இனி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கிடையாது’..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

Tue Aug 16 , 2022
1, 2ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ( Home Work ) தரக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் 1 மற்றும் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது தடை விதித்துள்ள நிலையில், அதை முறையாக அமல்படுத்த வேண்டும். பள்ளிகளில் பறக்கும் படையைக் கொண்டு ஆய்வு செய்து 1, 2ஆம் […]
’தூக்கம் தூக்கமா வருதே’..!! மகனை தூங்க விடாமல் விடிய விடிய டிவி பார்க்க வைத்த பெற்றோர்..!! எதற்காக தெரியுமா?

You May Like