fbpx

‘ரன் எடுக்க திணறும் கே.எல். ராகுல்’..!! இதற்கு ஒரு முடிவே கிடையாதா..? கோபத்தில் ரசிகர்கள்..!!

இந்திய அணியின் தொடக்க வீரர் என்று சொல்லிக் கொண்டு தொடர்ந்து 3-வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறார் கே.எல். ராகுல்.

டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ‘சூப்பர் 12’ சுற்றில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தியிருந்த நிலையில், நேற்று நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி இன்னும் 15 முதல் 20 ரன்களைக் கூடுதலாக எடுத்திருந்தால், தென்னாப்பிரிக்கா இலக்கை விரட்ட திண்டாடியிருக்கும். இந்திய அணி சார்பாக பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 68 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பினர்.

ரன் எடுக்க திணறும் கே.எல். ராகுல்..!! இதற்கு ஒரு முடிவே கிடையாதா..? கோபத்தில் ரசிகர்கள்..!!

குறிப்பாக சமீபகாலங்களில் சிறப்பாக செயல்படாத கே.எல். ராகுல் மீண்டும் 9 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை வெறுப்பேற்றினார். பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் 4 ரன்கள், நெதர்லாந்துக்கு எதிராக 9 ரன்கள் என ஆட்டமிழந்த ராகுல், நேற்றைய ஆட்டத்திலும் 14 பந்துகளுக்கு வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்திய அணியின் தொடக்க வீரர் என்று சொல்லிக் கொண்டு தொடர்ந்து 3-வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறார் கே.எல். ராகுல்.

ரன் எடுக்க திணறும் கே.எல். ராகுல்..!! இதற்கு ஒரு முடிவே கிடையாதா..? கோபத்தில் ரசிகர்கள்..!!

இப்படி சொதப்பலாக பேட்டிங் செய்யும் போக்குக்கு முடிவே கிடையாதா? என்று சமூக வலைதளங்களில் உணர்ச்சிவசப்படும் ரசிகர்கள், அடுத்து வரும் ஆட்டங்களிலாவது ராகுலை அதிரடியாக நீக்குமாறு பதிவிட்டு வருகின்றனர். இந்திய அணியில் தற்போது சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பேட்டிங்கில் சொதப்பி வரும் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் அதில் முக்கியமானவராக உள்ளார். நேற்று நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அக்சர் படேலுக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டிருந்தார். இந்திய அணி அடுத்து மோதும் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் ராகுலை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Chella

Next Post

’பிளிப்கார்டில் இனி இப்படி ஆர்டர் பண்ணாதீங்க’..!! ’கூடுதல் கட்டணத்தை தவிர்க்க சூப்பர் டிப்ஸ்’..!

Mon Oct 31 , 2022
பிளிப்கார்டில் ’கேஷ் ஆன் டெலிவரி’ ஆப்ஷன் தேர்வு செய்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பல பொருட்களை ஒப்பிட்டு பார்த்து வாங்க செளகரியமாக போய்விட்டது என்றே கூறலாம். குறிப்பாக, கொரோனாவின் வருகைக்கு பிறகு ஆன்லைன் ஷாப்பிங் மீதான மோகம் அதிகரித்துள்ளது. ஆரம்ப காலகட்டங்களில் நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே ஆன்லைன் ஷாப்பிங் அதிகளவில் இருந்து வந்தது. ஆனால், இன்றோ பட்டிதொட்டியெல்லாம் […]

You May Like