fbpx

சாம்கரனுக்கு ஆட்ட நாயகன் விருது…

இங்கிலாந்து அணியின் சாம்கரனுக்கு  ஆட்ட நாயகன் விருது தட்டிச்சென்றார்.

இங்கிலாந்து அணியின் வீரர் சாம்கரன் 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சாம்கரன் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதுவரை டி.20 12 சுற்று ஆட்டத்தில் சாம்கரன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

டி.20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய 9 வீரர்கள் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐ.சி.சி. ரசிகர்களின் வாக்கெடுப்பின்படியே தொடர் நாயகனை தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் 9 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.  

இந்த பட்டியலில் விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள். பாகிஸ்தான் வீரர்கள் ஷதாப் கான், ஷாஹீன், அப்ரிடி ஆகியோரும் இருந்தனர். இங்கிலாந்து அணியின் சாம்கரன், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜாஸ் பட்லர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இலங்கை அணியின் அசரங்கா, ஜிம்பாப்வே ஆல்ரவுண்டர், சிக்கந்தர் ராசா என ஒன்பது வீரர்கள் பட்டியலில் இருந்தனர்.

இதில் அதிக வாக்குகள் பெறுபவர்களுக்கு ஆட்ட நாயகன் விருது என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று ஆட்ட நாயகன் விருது அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் சூர்யகுமார் யாதவுக்கு இவ்விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாம்கரன் அதை தட்டிச் சென்றார்.

Next Post

புயலாக மாற அதிக வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

Sun Nov 13 , 2022
காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவலில், ’’ வரும் 16ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயலாக மாறினால் எந்த திசையில் செல்லும், எந்த அளவிற்கு தாக்கம் இருக்கும் போன்றவற்றை தொடர்ந்து கணித்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் […]

You May Like