ஜிம்வாப்வே மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த பயிற்சியாளர் சினிகிவே எம்போபு (37) திடீரென காலமானார். இரண்டு மகளிர் உலகக் கோப்பை போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்கு பயிற்சியளித்த இவர், வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என கூறப்படுகிறது. திடீரென அவர் நிலை தடுமாறியதாகவும், பின் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி அன்று தான் சினிகிவேவின் கணவர் உயிரிழந்தார். இந்நிலையில், அடுத்தடுத்த இந்த இறப்புகள், இவர்களின் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![’கணவர் இறந்து ஒரு மாதம் கூட ஆகல’..!! ஜிம்பாப்வே பயிற்சியாளர் திடீர் மரணம்..!! பெரும் சோகம்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-09-at-2.55.48-PM.jpeg)
இவரது மறைவு குறித்து ஜிம்பாவே விளையாட்டுத்துறை தெரிவித்துள்ள தகவலின்படி, “ஜிம்பாப்வே மூத்த மகளிர் தேசிய அணியின் உதவிப் பயிற்சியாளர் சினிகிவே, அவருடைய கணவர் ஷெப்பர்ட் மகுனுரா மறைந்த ஒரு மாதத்திற்குள் திடீரென மரணமடைந்துள்ளார் என்பதை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட் (ZC) மிகுந்த சோகத்துடனும் அதிர்ச்சியுடனும் இதை அறிவித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சினிகிவே உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவர் மரணத்துக்கான காரணம் சொல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.