ஆசிய கோப்பைத் தொடர் ஆக.30ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக 17 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் சஞ்சு சாம்சன் கூடுதல் வீரராக தான் சேர்க்கப்பட்டுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது. நீண்ட நாட்களாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்த கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும், அணியில் இணைந்துள்ளனர்.
அயர்லாந்து தொடரில் சஞ்சு சாம்சன், ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிரடியாக செயல்பட்டால் மட்டும்தான், ஆசியக்கோப்பையில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கூறியதாகவும், ஆனால் சாம்சன் ஸ்பின்னர்களுக்கு எதிராக சொதப்பியதால்தான், திலக் வர்மாவை சேர்த்துவிட்டு, சாம்சனை பேக்கப் வீரராக சேர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுஒருபுறம் இருக்க, கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2023 நிலவரப்படி, சஞ்சு சாம்சனின் நிகர மதிப்பு 10 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.75 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர், மாத வருமானம் ரூ.1 கோடி பெறும் நிலையில், ஆண்டுக்கு ரூ.14 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
சஞ்சு சாம்சன் தனது மனைவி சாருலதா சாம்சனுடன் கேரளாவில் வசித்து வருகிறார். பெங்களூரு, மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பல சொத்துக்களையும் அவர் குவித்து வைத்திருக்கிறார். இந்த சொத்துக்களில் ரூ.4 கோடி கணிசமான முதலீட்டில் உள்ளார். கேரளாவின் விழிஞ்சத்தில் உள்ள அவரது இல்லத்தின் மதிப்பு சுமார் ரூ.4 கோடி என கூறப்படுகிறது.
சஞ்சு சாம்சனிடம் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஆடி ஏ6 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் போன்ற மிகவும் மதிப்பு மிக்க பிராண்டுகளின் கார்கள் உள்ளன. பல ஆண்டுகளாக, இவரின் நிகர மதிப்பு கணிசமாக வளர்ந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் 40% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சஞ்சு சாம்சன் தனது கிரிக்கெட் வருவாயைத் தவிர, பல்வேறு ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்து லாபம் கண்டு வருகிறார். மேலும், சஞ்சு சாம்சன் உதவி செய்வதில், மிகவும் பெயர் பெற்றவர். கடந்த 2018ஆம் ஆண்டு கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.15 லட்ச ரூபாயை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியிருந்தார்.