fbpx

அமெரிக்க ஓபன் டென்னிஸ்..! 19 வயதில் வரலாற்று சாதனை படைத்தார் கார்லஸ்..!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தொடரின் 3-ஆம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ் கார்பியா, 5ஆம் நிலை வீரரான நார்வேயின் கேஸ்பர் ரூட் உடன் பலப்பரீட்சை நடத்தினார். கிராண்ட் ஸ்லாம் போட்டியில் முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் இருவரும் களமிறங்கினர். விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் முதல் செட்டை 6-4 என அல்காரஸ் கார்பியாவும், இரண்டாவது செட்டை 6-2 என ரூடும் கைப்பற்றினர். மூன்றாவது மற்றும் நான்காவது செட்களை 7-6, 6- 3 என 19 வயதான அல்காரஸ் கார்பியா கைப்பற்றினார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக அவர் பட்டம் வென்று அசத்தினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்..! 19 வயதில் வரலாற்று சாதனை படைத்தார் கார்லஸ்..!

மேலும், டென்னிஸ் வீரர்களுக்கான உலகத் தரவரிசையிலும் முதலிடத்திற்கு அவர் முன்னேறியுள்ளார். இதன் மூலம் மிக இள வயதில் நம்பர் 1 வீரர் என்ற இடத்தை எட்டிய சாதனையும் அல்காரஸ் வசம் வந்து சேர்ந்துள்ளது. லீட்டன் ஹெவிட் என்ற வீரர் தனக்கு 20 வயது 9 மாதங்கள் இருக்கும்போது உலகின் நம்பர் 1 வீரராக திகழ்ந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

Chella

Next Post

#Covid-19: 24 மணி நேரத்தில் மட்டும் 5,521 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு...!

Mon Sep 12 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,521 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 15 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,322 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

You May Like