fbpx

”விராட் கோலியின் மோசமான ஷாட்கள்”..! வீரேந்திர சேவாக் பரபரப்பு கருத்து..!

”இதுபோன்ற மோசமான ஷாட்களை ஒருபோதும் விராட் கோலி விளையாடியதில்லை” என்று சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிகொண்ட போட்டி கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் கடைசி வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போனது. இறுதியில் 3 ஓவர்களுக்கு 32 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அபாரமாக விளையாடினர். இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில், ஹர்திக் பாண்டியா பாகிஸ்தான் பந்துவீச்சாளர் நவாஸ் வீசிய பந்தை சிக்சர்க்கு பறக்கவிட்டு போட்டியை முடித்து வைத்தார்.

”விராட் கோலியின் மோசமான ஷாட்கள்”..! விரேந்திர சேவாக் பரபரப்பு கருத்து..!

கடந்த 2021ஆம் ஆண்டு உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடைந்த படுதோல்விக்கு பழிதீர்த்து கொண்டது இந்திய அணி. இந்நிலையில், தொடர்ந்து ஃபார்ம் அவுட்டில் இருந்து வந்த விராட் கோலி, இந்த போட்டியில் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், இரண்டாவது பந்திலேயே ஒரு விக்கெட்டை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில் 35 ரன்கள் நிலைத்து நின்று ஆடி அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார் விராட் கோலி.

”விராட் கோலியின் மோசமான ஷாட்கள்”..! விரேந்திர சேவாக் பரபரப்பு கருத்து..!

விராட் கோலியின் இந்த பேட்டிங்க் குறித்து பேசியிருக்கும் இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், “அவர் 150 ரன்களைத் சேஸிங் செய்யும் போது ஒருபோதும் எளிதில் ஆட்டமிழந்துவிட மாட்டார். நிலைத்து நின்று ஆடுவார். மேலும், இதுபோன்ற மோசமான ஷாட்களை ஒருபோதும் அவர் இதற்கு முன் விளையாடியதில்லை. கோலியிடம் இருந்து பார்த்து பழகிய பேட்டிங் இன்னும் வெளிப்படவில்லை. வரும் டி20 உலகக் கோப்பைக்குள் கோலி பழைய மனநிலைக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Chella

Next Post

ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு விலைகொடுத்து; கடத்தல் குழந்தையை வாங்கிய பாஜக நிர்வாகி கைது..!

Wed Aug 31 , 2022
உத்தரபிரதேச மாநிலம் மதுரா சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 24-ஆம் தேதி 7 மாத பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டது. ரயில் நிலையத்தில், குழந்தை பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த போது அங்குவந்த ஒருவர் குழந்தையை கடத்தி சென்றார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை கடத்திய கும்பல் குழந்தையை தனியார் மருத்துவமனை நடத்தி வரும் பூனம் மற்றும் விம்லேஷ் டாக்டர் தம்பதியிடம் கொடுத்தது தெரியவந்தது. […]

You May Like