தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு ஓட்டு போடும் உரிமை…! ராமதாஸ் கோரிக்கை…!

ramadass 2025

தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் ; இலங்கையில் 1983-ம் ஆண்டு நடந்த போர் காரணமாகவும் பல்வேறு காலகட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் தமிழகத்துக்கு அடைக்கலம் வந்தனர். உலகின் பல நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளன. இந்தியாவில்தான் ஈழத்தமிழ் மக்கள் அகதி முகாம்களிலேயே ஆயுள் முழுதும் வாழ்ந்து முடிக்கிறார்கள்.

தற்போதைய தலைமுறையாவது சுதந்திரமாக வாழ வேண்டும். அதற்கு முதல்கட்டமாக தமிழகத்தில் தற்போது தொடங்கவுள்ள தீவிர வாக்காளர் திருத்த பணியின் போது தமிழகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவைக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் வாக்காளர் திருத்த பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அந்தந்த பகுதிகளுக்கு வரும்போது பாமக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேர்தல் அலுவலர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு தவறாமல் சென்று தகவல்களை குறிப்பெடுத்து, சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Vignesh

Next Post

உலகக் கோப்பை மகளிர் சாம்பியன்களை சந்தித்த பிரதமர் மோடி!. மன உறுதிக்கு பாராட்டு!. வைரல் கிளிக்ஸ்!.

Thu Nov 6 , 2025
உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியை, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடி இன்று வரவேற்றார். வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக வீராங்கனைகளை பிரதமர் வாழ்த்தினார். மேலும், போட்டியின் தொடக்கத்தில் தொடர்ச்சியாக மூன்று தோல்விகள் மற்றும் ஆன்லைன் ட்ரோலிங் ஆகியவற்றை எதிர்கொண்ட பிறகு, அவர்களின் குறிப்பிடத்தக்க மீள்வருகையைப் பாராட்டினார். 2017 ஆம் ஆண்டு பிரதமருடனான சந்திப்பை நினைவு கூர்ந்த அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர், அப்போது […]
pm modi meets womens champions

You May Like