பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலை மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அதன்படி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமான், ஜி.கே, மணி, சசிகலா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்..
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மரியாதை செலுத்த வந்தார்.. அப்போது அங்கிருந்த பூசாரி அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கூறியதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது..
மேலும் எதற்காக இத்தனை பூசாரிகள் இங்கு நிற்கிறீர்கள்.. வெளியே செல்லுங்கள், இவர்களுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டுள்ளார்.. ஆனால் அங்கிருந்து வெளியேற பூசாரி மறுத்ததால், ஸ்ரீதர் வாண்டையார் அவரை கன்னத்தில் அறைந்தார்.. பூசாரியை வெளியே போகுமாறு நெஞ்சில் கை வைத்தும் அவர் தள்ளினார்.. பூசாரிக்கு ஆதரவாக வந்தவர்களையும் ஸ்ரீதர் வாண்டையார் ஆதரவாளர்கள் தடுத்து தள்ளிவிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது..
மேலும் பூசாரிகள் வெளியே சென்றால் தான் நான் இங்கிருந்து வெளியே செல்வேன் என்று ஸ்ரீதர் வாண்டையார் அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர்.. ஆனால் காவல்துறையினரிடமும் ஸ்ரீதர் வாண்டையார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. தேவர் நினைவிடத்தில் இருந்து ஸ்ரீதர் வாண்டையார் வெளியேற வேண்டும் என்று பூசாரிகளும் கோரிக்கை விடுத்தனர்..
இதனிடையே அங்கு மரியாதை செலுத்த வந்த டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஸ்ரீதர் வாண்டையாரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.. இதையடுத்து அந்த பூசாரிகள் வெளியேறியதால் ஸ்ரீதர் வாண்டையார் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்..



