கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செந்தில் பாலாஜி மீது வைத்த தவெகவினர் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதிலளித்தார். குறிப்பாக கூட்ட நெரிசல் நடந்த உடனே செந்தில் பாலாஜி எப்படி அங்கு சென்றார் என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.. மேலும் “ தவெக கூட்டத்திற்கு வந்தது கட்டுங்கடங்காத கூட்டம் இல்ல.. கட்டுப்பாடற்ற கூட்டம்.. கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த போது நான் கட்சி அலுவலகத்தில் தான் இருந்தேன்..
கட்சி அலுவலகத்தில் இருந்து அமராவதி மருத்துவமனை அருகில் தான் உள்ளது.. அதனால் எனக்கு தகவல் கிடைத்த உடன் உடனடியாக அங்கு சென்றேன் என்றார். எந்த அரசியல் கட்சியின் கூட்டமாக இருந்தாலும், இனி இதுபோன்று நடக்கக் கூடாது. கரூரில் நடந்த சம்பவத்தை அரசியலாக பார்க்க விரும்பவில்லை. காவல்துறை எவ்வளவு சொல்லியும் விஜய் கேட்காததால் தான் இவ்வளவு பிரச்சனை.
கூட்டம் அதிகமாகியதால் ஜெனரேட்டர் அறை தடுப்புகள் உடைக்கப்பட்டு, அக்கட்சியினர் உள்ளே செல்ல தொடங்கினர். அதனை வீடியோவிலேயே பார்க்க முடியும். இதன் காரணமாகவே ஜெனரேட்டர் அணைக்கப்பட்டது. மின் விநியோகம் என்றும் தடை செய்யப்படவில்லை என்றார். பிரச்சார கூட்டத்தில் கத்தி குத்து நடந்ததாக சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு பதில் அளித்த அவர், “கத்தி குத்து நடந்தது உண்மையெனில் அந்த நபர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.. பதில் சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Read more: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.. குட்நியூஸ் சொன்ன அரசு!