உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: 45 நாட்களில் தீர்வு கிடைப்பது உறுதி..!! – ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா சொன்ன தகவல்

stalin amutha ias 1634613388 1636214905

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை தொடங்க உள்ளது. இதுவரை பெறப்பட்ட மனுக்கள் குறித்து தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.


அவர் கூறுகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம், நகரங்களில் 43 சேவைகளும், கிராமங்களில் 46 சேவைகளும் 13-15 அரசுத் துறைகள் மூலம் வழங்கப்படுகின்றன. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு அதிகபட்சமாக 45 நாள்களில் தீர்வு காணப்படும். உரிய ஆவணங்களுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டத்துக்கு வந்தால், உடனடியாக உங்கள் கோரிக்கை நிறைவேற்றித்தரப்படும்.

முகாம்கள் நடக்கும் ஒரு வாரத்துக்கு முன்பு வீடு, வீடாகச் சென்று மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். வாரத்தில் நான்கு நாள்கள் முகாம் நடைபெறும். இது நவம்பர் மாதம் வரை நடைபெறவிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்தத் திட்டம், மக்களுக்கும் அரசுக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தி, குறைகளை விரைவாகத் தீர்க்க உதவுகிறது. முதல்வரின் நேரடி மேற்பார்வையில் இது செயல்படுவதால், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் திறம்பட பணியாற்றுகின்றனர். முதற்கட்டமாக, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை 120 முகாம்கள் நடைபெற உள்ளன என்று அமுதா கூறினார்.‘

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், 2021இல் முதல்வர் அறிவித்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தின் விரிவாக்கம் ஆகும். இதன் மூலம், முதல் 100 நாட்களில் 2.3 லட்சம் மனுக்கள் தீர்க்கப்பட்டன. இந்த முயற்சி, தமிழ்நாட்டில் மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்று அமுதா தெரிவித்தார்.

Read more: AI மூலம் ஆபாச வீடியோ.. இணையத்தில் வெளியிட்டு வருமானம் ஈட்டிய இளைஞன் கைது..!!

Next Post

எச்சரிக்கை.. இந்த மாவட்டங்களில் மிக அதிக கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த நாட்களில்?

Mon Jul 14 , 2025
நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ நேற்று மாலை, வடக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக,மேற்கு வங்கம்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய வங்கதேச பகுதிகளில்‌ நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில்‌ மேற்கு வங்க பகுதிகளில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்‌. […]
rainfall 1699931590800 1704797100426

You May Like