“உங்க லட்சணம் இதுதான்.. ஏன் மாணவர்களின் கல்வியையும் சேர்த்து கெடுக்கிறீர்கள்..?” – துரைமுருகன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்..!

annamalai

ராணிப்பேட்டை மாவட்டம் கொண்ட குப்பம் ஊராட்சி குமணந்தாங்கல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஒரு நாளில் மாணவர்களின் கல்வி ஒன்றும் பாதிக்கப்படாது என பொறுப்பற்ற முறையில் பதில் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமைச்சரின் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர், சூரை, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசுப்பள்ளிகளிலும், குமணந்தாங்கல் அரசுப்பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி மீண்டும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. ஏற்கனவே, திருச்சியிலும் இதே போல அரசுப்பள்ளியில் முகாம் நடத்தப்பட்டதை மாணவர்களும், பெற்றோரும் கண்டித்த நிலையில், தனது அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்ற துஷ்பிரயோகங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய செய்தியாளர்களிடம், “ஒருநாளில் பாடத்தை எடுக்கப்போவதில்லை. மாணவர்களுக்கு எந்த இடையூறும் இல்லை” என கூச்சமின்றி பதிலளித்துள்ளார் அமைச்சர் திரு. துரைமுருகன். உங்களின் சுய விளம்பரத்திற்காக முகாம்களை நடத்தவேண்டும் என்றால் உங்கள் கட்சி அலுவலகங்களில் நடத்தலாமே அமைச்சரே. மீண்டும் மீண்டும் அரசுப்பள்ளிகளில் கைவைப்பது என்ன மாதிரியான மனநிலை?

ஏற்கனவே, திருபுவனத்தில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்ததை அனைவரும் அறிவார்கள். இதுதான் நீங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் லட்சணம். இப்படியிருக்க, ஏன் மாணவர்களின் கல்வியையும் சேர்த்து கெடுக்கிறீர்கள்? மாணவர்களின் கல்வியை தடுத்து அரசுப்பள்ளிகளில் முகாம் நடத்துவதை திமுக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு வலியுறுத்துகிறேன்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Read more: சனியின் நேரடி பெயர்ச்சி.. 5 ராசிக்காரர்களின் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி! ​​ராஜயோகம் அதிர்ஷ்டத்தைத் தரும்!

English Summary

Stalin’s project camp with you in government schools… Annamalai condemns Minister Duraimurugan for his irresponsible response

Next Post

கரூர் துயரம்.. தவெக நிர்வாகிக்கு 2 நாள் SIT காவல்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Thu Oct 9 , 2025
கரூரில் கடந்த 27-ம் தேதி விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது. இது தொடர்பாக தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.. இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வு குழுவை (SIT) அமைத்தது.. இந்த குழு கரூர் […]
tvk madhiyalagan

You May Like