ஸ்டெர்லைட் ஆலை கழிவு விவகாரம்!. தமிழக அரசுக்கு 2 வாரம் கெடு விதித்த உயர்நீதிமன்றம்!.

sterlite high court 11zon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள கழிவுகளை அகற்றி சீரமைப்பது குறித்து முடிவெடுக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில் இரண்டு வாரங்களில் குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தேங்கியுள்ள அபாயகரமான கழிவுகளை அகற்றவும், ஆலையை இடிக்க கோரியும் சமூக ஆர்வலர் பேராசிரியை பாத்திமா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் நேற்று (ஜூன் 11) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், “ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள மாசுவை அகற்றுவதற்காக, தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (நீரி), எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனம் (டெரி), இ.ஆர். எம். இந்தியா பிரைவேட் லிமிடெட், ஸ்ட்ராட்ஸ் என்விரான்மென்டல் பிரைவேட் லிமிடெட் ஆகிய நான்கு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது,” என்று கூறப்பட்டிருந்தது. இதில், நீரி நிறுவனம் ஏற்கெனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆலோசனைகள் வழங்கி உள்ளதாக கூறி மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள மாசுவை அகற்றுவதற்கான பணிகளை எந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம் என்பது குறித்து முடிவு செய்வதற்காக, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மூத்த விஞ்ஞானி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர், மும்பை ஐஐடி நிபுணர் ஆகியோர் அடங்கிய குழுவை இரண்டு வாரங்களில் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், மூன்று நிறுவனங்களும் தங்கள் அறிக்கைகளை இந்த குழுவுக்கு அளிக்க வேண்டும். இந்த அறிக்கைகளை ஆய்வு செய்து, இந்த குழு, ஸ்டெர்லைட் ஆலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Readmore: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. விசாரணை நடத்த உத்தரவு!. BSF வீரர்களுக்கு அழுக்கு ரயில் பெட்டிகளை வழங்கிய விவகாரத்தில் அஷ்வினி வைஷ்ணவ் அதிரடி!

KOKILA

Next Post

"ஓசி" பேருந்து என்ற திமுக எம்.எல்.ஏ... நயினார் நாகேந்திரன் கண்டனம்...!

Thu Jun 12 , 2025
பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்போரை “ஓசி” என்று தரம் தாழ்ந்து விமர்சித்து பேசிய ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில்; கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை “ஓசி” என்று திமுகவைச் சார்ந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு முன் முன்னாள் திமுக அமைச்சர் […]
nainar nagendran mk Stalin 2025

You May Like