வேலைநிறுத்தப் போராட்டம்… 5 மாநிலத்தில் சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…!

Gas 2025

காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதால், 5 மாநிலங்களில் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.


தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லில் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் உள்ள காஸ் டேங்கர் லாரிகள், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு சமையல் காஸ் கொண்டு செல்லும் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன.

மொத்தம் 5,000 டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வாடகை ஒப்பந்தத்தில் 700-க்கும் அதிகமான காஸ் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், நாமக்கல்லில் தென்மண்டல காஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்க அவசரப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய அரசின் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தகுதியான அனைத்து காஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அதுவரை தென்னிந்தியா முழுவதும் உள்ள 5,000 காஸ் டேங்கர் லாரிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

காசா அமைதி ஒப்பந்தம்... அதிபர் Trump-க்கு போன் செய்து வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி...!

Fri Oct 10 , 2025
காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். காசாவில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அமைதி ஒப்பந்தம் அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே 72 மணி நேர கவுண்டவுன் தொடங்கும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. வரலாற்று […]
Trump modi 2025

You May Like