Alert: மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று… 4-ம் தேதி வரை வானிலை மையம் எச்சரிக்கை..‌.!

rain 1

தமிழகத்தில் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தொடர்ந்து ஆகஸ்ட் 4-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரி. குறைந்தபட்ச வெப்பநிலை 82.4 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.

இன்று மத்திய மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், வடக்கு அரபிக்கடல் பகுதிகள், கொங்கன்-கோவா-கர்நாடகா-கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை மத்திய மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், வடக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள், கொங்கன்-கோவா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

"நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கேம் டெவலப்பர்... கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்...!

Wed Jul 30 , 2025
“நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கேம் டெவலப்பர், ஆர்டிஸ்ட் மற்றும் புரோகிராமர் திறன் பயிற்சிக்காக கூகுள், யூனிட்டி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தில், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் திறன்சார்ந்த பயிற்சிகள் பெற்று வருகின்றனர். மேலும் தமிழக மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் […]
money tn govt 2025

You May Like